கேமராவுக்காகவே உருவாகும் ரெட்மி கே60 சீரீஸ். என்ன எதிர்பார்க்கலாம்?

கேமராவுக்காகத் தான் நான் போனே வாங்குறேன்.. அப்படீங்கிற அளவுக்கு போட்டோ, வீடியோ குவாலிட்டி மேல ஆர்வம் உள்ள ஆளா நீங்க? அப்போ உங்களுக்கான ஒரு மொபைல் சீக்கிரமே வரப் போகுது ரெட்மி கே60 சீரீஸ்.

பொதுவாகவே ரெட்மியின் கே சீரீஸ் மாடல்களுக்கு நல்லதொரு வரவேற்பு இருக்கும். தற்போது அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிது. ஏனென்றால் வரவிருக்கும் ரெட்மி கே60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் OIS என்கிற ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) தொழில்நுட்பம் சேர்க்கப்பட உள்ளது! இது தவிர வேறு என்னென்ன அம்சங்கள் இந்த மொபைலில் இருக்குமென எதிர்பாக்கலாம்? இணையத்தில் வெளியாகி இருக்கும் லீக் பட்டியலைப் பார்க்கலாம்.

மெகா பிக்சல்?

ஒரு ஸ்மார்ட்போனின் கேமராவில் 64MP அல்லது 108MP சென்சார் இருந்தால் மட்டுமே அதுவொரு நல்ல கேமரா போனாகி விடாது. அது நல்ல அவுட்-புட்களை வழங்கும் திறன்களை / அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்; அப்போதுதான் அதுவொரு நல்ல கேமரா போன்!

“மெகா பிக்சல் முக்கியம் அல்ல; கேமராவின் திறன்கள் தான் முக்கியம்” என்கிற விஷயத்தை கையில் எடுத்த ஒரு மொபைல் போன் நிறுவனம், மிகவும் பிரபலமான தனது ஸ்மார்ட்போன் ஒன்றில் – எக்கச்சக்கமான விஷயங்களைச் சேர்த்துள்ளது! இது கேமராபோன் விரும்பிகளை அந்த மொபைல் போன் வெளியீட்டுக்காக காக்க வைத்திருக்கிறது. அது ஷாவ்மி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மியின் கே சீரிஸ் (K Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசெஷன்

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, ரெட்மி K60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP மெயின் சென்சாரோடு வெளிவர இருக்கிறது. OIS என்பது சற்றே மென்மையான நடுக்கமற்ற வீடியோ ரெக்கார்டிங், தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும் திறன்களை வழங்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும்! தொழில்முறை கேமராவில் இருக்கும் இந்த அம்சம் சமீபகாலமாக மொபைலிலும் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் ப்ரீமியம் மொபைல்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கேமரா மட்டும் அல்ல..

வரவிருக்கும் ரெட்மி கே60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் கேமரா மட்டும் தான் சிறப்பாக இருக்குமா என்றால்.. இல்லை! ரெட்மி கே60 சீரிஸில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5500mAh பேட்டரி இடம்பெறும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. எனவே சார்ஜிங்கைப் பொறுத்தவரை பிரச்சனை இருக்காது. மேலும், இந்த மொபைல்கல் 30W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கலாம் என்றும் தெரிய வருகிறது.

டிஸ்பிளே

ரெட்மி K60 சீரீஸில், பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே கட்அவுட்டுடன் கூடிய 2K டிஸ்ப்ளே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அது Dolby Vision HDR மற்றும் 120Hz AMOLED பேனலை கொண்டு இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. இவற்றின் மூலம் இந்த மொபைல் சிறந்த டிஸ்ப்ளே பெற்றிருக்கும் எனத் தெளிவாகத் தெரிகிறது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது Dimensity 8100 சிப், Dimensity 8200 க்கு அடுத்ததாக இயங்கும் என்று கூறப்படுகிறது.

விலை

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, Redmi K60 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 என்கிற பட்ஜெட்டை சுற்றியதொரு புள்ளியில் அறிமுகம் செய்யப்படலாம். வெளியீட்டை பொறுத்தவரை, இது நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.