ரூ.500 விலைக்குள் 3டிபி வரை டேட்டா கிடைக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ளான்கள்

ரூ.500 விலைக்குள் மாதம் 3 TB டேட்டா வேண்டுமா? அப்படியானால், நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம். தினசரி டேட்டா குறை திண்டாட்டத்தைக் குறைப்பதற்காகவே அறிமுகம் செய்யப்பட்ட ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) திட்டங்களை தான் இந்த பதிவுடன் இணைத்துள்ளோம்.

இந்த விலை வரம்பிற்குள் மாதம் சுமார் 3TB அளவிலான டேட்டா நன்மை கிடைக்கும் பிராட்பேண்ட் ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்கள் இப்போது வழங்குகின்றன. இந்த விலை வரம்பில் உங்களுக்கு ப்ரீபெய்ட் பைபர் திட்டம் (Prepaid fiber plans) மற்றும் போஸ்ட்பெய்ட் பைபர் திட்டம் (Postpaid fiber plans) ஆகிய 2 வகையான ரீசார்ஜ் திட்டங்களை இரண்டு நிறுவனங்களும் வழங்குகின்றன.

ஏர்டெல் ரூ. 499 திட்டம்

ஏர்டெல் நிறுவனம் இந்த விலை வரம்பிற்குள் ஒரே ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை மட்டுமே கொண்டுள்ளது. இந்தத் திட்டம் ரூ. 499 விலைக்கு வருகிறது. ரூ. 500 தான் உங்கள் பட்ஜெட் என்றால், இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்தை நீங்கள் தவறவிடக்கூடாது. இந்த திட்டம் உங்களுக்கு ரூ.499 விலையில் 40 Mbps வேகத்தில் ஒரு மாதம் முழுக்க 3.3TB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு இலவச வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையும் கிடைக்கும். இத்துடன், இந்த திட்டத்தின் பயனர்களுக்கு Xstream Premium, Wynk Music, FASTag கேஷ்பேக் போன்ற பல இலவச நன்மைகளும் கிடைக்கின்றன.

 

ஜியோஃபைபர் திட்டங்கள்

ஜியோஃபைபர் ரூ. 500 விலைக்குக் கீழ் மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் ஒன்று ப்ரீபெய்ட் திட்டமாகும். மற்ற இரண்டு திட்டங்களும் போஸ்ட்பெய்ட் திட்டங்களாகும்.

 

ரூ 399 ப்ரீபெய்ட் திட்டம்

இது ரூ. 399 விலையில் வருகிறது. இது வரிகள் இல்லாத விலை என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 30 Mbps வேகத்தில் 3.3TB மாதாந்திர டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. இதனுடன் இலவச குரல் அழைப்பு நன்மையும் உள்ளது. பட்ஜெட் விலையில் இது ஒரு பிரமாண்டமான திட்டமாகும்.

 

ரூ 399 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஜியோ ஃபைபரிலிருந்து ரூ. 399 விலைக்குக் கிடைக்கும் போஸ்ட்பெய்டு திட்டம் இதுவாகும். இந்த திட்டமும் ரூ. 399 ப்ரீபெய்ட் திட்டத்தைப் போன்ற பலன்களை வழங்குகிறது. இது 30 Mbps வேகத்தில் 3.3TB மாதாந்திர டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை நிறுவனம் வழங்குகிறது. ஜியோ நிறுவனம் இதை ஆறு மற்றும் பன்னிரண்டு மாதங்களுக்கு வழங்குகிறது. ஆனால் அது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

 

ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம்

இந்த திட்டம் OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் வருகிறது. இது 400+ டிவி சேனல்களுக்கான அணுகலுடன் வருகிறது. Universal+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, JioCinema, ShemarooMe மற்றும் JioSaavn போன்ற சந்தாக்கள் இலவசமாக கிடைக்கிறது. இந்த போஸ்ட்பெய்டு JioFiber திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 30 Mbps பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை வழங்குகிறது. ஏர்டெல் உடன் ஒப்பிட்டு பார்க்கையில், இதன் வேகம் குறைவாக இருக்கிறது. ஆனால், நீங்கள் OTT நன்மைகளுடன் 3 TB டேட்டா நன்மையை வாங்க விரும்பினால், இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்.