சமீபத்தில் ஒன்ப்ளஸ் வெளிட்ட புதிய சாப்ட்வெர் அப்டேட்டில் பிரச்சனை கண்டறியப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு பயனருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த அப்டேட்டை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருக்கும் படி, வலியுறுத்தப்பட்டுள்ளது. சரி, இந்த சமீபத்திய அப்டேட் மூலம் என்னென்ன சிக்கல்கள் உருவானது என்பதை இப்போது பார்க்கலாம்.
சாப்ட்வேர் அப்டேட்
OnePlus நிறுவனம் சமீபத்தில், அதன் 5G ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான உரிய சாப்ட்வேர் அப்டேட்களை படிப்படியாக அறிமுகம் செய்து வந்தது. இத்துடன் சில ஸ்மார்ட்போன்களுக்கான நவம்பர் மாத அப்டேட்டையும் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அப்படி, OnePlus 8T பயனர்களுக்காக வெளியிடப்பட்ட புதிய அப்டேட் மூலம் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.
OnePlus 8T
OnePlus 8T ஒரு 5ஜி போன் என்பது குறிப்பிடத்தக்கது. இது Qualcomm Snapdragon 865 சிப்செட் உடன் இயங்குகிறது. உண்மையிலேயே OnePlus 8T ஒரு நல்ல 5ஜி போன் தான் என்றாலும், இப்போது வெளியான புதிய அப்டேட்டால் OnePlus 8T பயனர்கள் பலர் செம கடுப்பில் அலைகிறார்கள். ஏனெனில் 5ஜிக்கு அப்கிரேட் செய்ய ஆசைப்பட்ட பயனர்கள் போனையே உபயோகிக்க முடியாமல் போனது தான் காரணம்.
OxygenOS C.36 அப்டேட்!
OnePlus நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட OxygenOS C.36 வெர்ஷனை அப்டேட் செய்த OnePlus 8T பயனர்களின் டிஸ்பிளேவில் பச்சை நிற கோடு தோன்ற துவங்கியுள்ளது. அப்டேட் செய்ததிற்குப் பின்னரே இந்த கோளாறு கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட OnePlus 8T பயனர்கள், “பச்சை பச்சையாக” தெரிகிறது என்று நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர்.
பூட்டிங் பிரச்சனை
டிஸ்பிளேவில் “பச்சை பச்சையாக” ஸ்ட்ரைப்ஸ் இன்னும், சில பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இன்னும் சிலருக்கு புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பிறகு பூட் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டிஸ்பிளே ஸ்ட்ரைப்ஸ் போல, பலர் பூட்டிங் கோளாறு பற்றியும் நிறுவனத்திடம் புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர்.
ஒரு பயனருக்கு பூட்டிங் துவங்க 2 மணி நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் சிலருக்கு பூட்டிங்கே துவங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பல முறை ரீஸ்டார்ட் செய்த பிறகு ஒரு வழியாக போன் பூட்டிங் பிராஸசை துவங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த பூட்டிங் சிக்கல் பெருமளவில் காணப்படவில்லை என்றும், சிலருக்கு மட்டுமே ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், டிஸ்பிளேவில் ஆங்காங்கே பச்சை நிறத்தில் கோடுகள் போல, ஸ்ட்ரைப்ஸ் தெரிவது பல பயனர்களால் புகாரளிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் OnePlus 8T இருக்கிறது என்றால், உங்களுக்கும் அப்டேட் செய்ய சொல்லி புதிய நோட்டிபிகேஷன் எதுவும் வந்தால், கொஞ்சம் பொறுத்திருந்து, இந்த பிரச்சனையை சரி செய்த பிறகு நிறுவனம் வெளியிடும் அப்டேட்டை பயன்படுத்தவும்.






