ஜியோ Vs ஏர்டெல் – 5ஜி வேகத்துல எது பெஸ்ட்?

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கின் வேகத்தை பரிசோதித்துப் பார்த்ததில் வெளியான தகவல்கள் சற்று அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு ரிலையன்ஸ் ஜியோ (Realiance Jio) வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல, ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களும் கூட கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை, சமீபத்திய ஓக்லா ரிப்போர்ட் (OOKLA Report) வழியாக அம்பலமாகி உள்ளது! அதென்ன உண்மை? அதென்ன ரிப்போர்ட்? ஓக்லா என்றால் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஓக்லா என்றால் என்ன?

ஓக்லா (Ookla) என்பது கனெக்ஷன் டேட்டா ரேட் (Connection data rate) மற்றும் லேடன்சி (Latency) போன்ற இன்டர்நெட் அக்சஸ் பெர்ஃபார்மென்ஸ் மெட்ரிக்ஸை (Internet access performance metrics) “இலவசமாக” பகுப்பாய்வு செய்யும் ஒரு இணைய சேவை (Web Service ) ஆகும். ரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் – இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களின் உண்மையான இன்டர்நெட் வேகம் தொடர்பான தரவுகளை புட்டுப்புட்டு வைக்கும் “ஒரு டெலிகாம் வில்லன்” என்றால் – அது ஓக்லா தான்!

ஏர்டெல் வேகம் என்ன?

சமீபத்தில் வெளியான ஓக்லாவின் ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட் ஆனது ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திய கையோடு, ஏர்டெல் யூசர்களின் மனதை புண்படுத்தி உள்ளது என்றே கூறலாம்! ஏனென்றால் லேட்டஸ்ட் ஓக்லா ஸ்பீட் டெஸ்ட் ரிப்போர்ட் ஆனது, ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி வேகத்துடன் ஒப்பிடும் போது ஜியோ நிறுவனத்தின் 5ஜி வேகமானது மிகவும் சிறப்பாக உள்ளது என்கிற உண்மையை அம்பலப்படுத்தி உள்ளது!

ஸ்பீட் டெஸ்ட்

வெளியான ஓக்லா ஸ்பீட் டெஸ்ட் அறிக்கையின்படி, சி-பேண்டைப் பயன்படுத்தும் போது ஜியோ 5ஜி-யின் சராசரி பதிவிறக்க வேகம் – 606.53Mbps மற்றும் 875.26Mbps வரை இருந்தது. அதேசமயம் ஏர்டெல் 5ஜி-யின் சராசரி பதிவிறக்க வேகமானது 365.48 Mbps – 716.85 Mbps-ஐ மட்டுமே அடைய முடிந்தது. அதனை தொடர்ந்து ஓக்லாவானது, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி 5G பதிவிறக்க வேகங்களை ஒப்பிட்டு பார்த்தது.

4 முக்கிய நகரங்களில் கிடைத்த சராசரி 5G பதிவிறக்க வேகங்களை ஒப்பிட்டு பார்த்த போதிலும் கூட ஏர்டெல் நிறுவனமானது பின்னடைவைத்தான் சந்தித்துள்ளது. ஜியோவும் ஏர்டெல்லும் என்ன அளவிலானா சராசரி 5ஜி வேகத்தை பதிவு செய்துள்ளது என்கிற விவரங்கள் இதோ:

டெல்லியில் – 600Mbps (ஜியோ) 197.98Mbps (ஏர்டெல்)
மும்பையில் – 514.38Mbps (ஜியோ) 271.01Mbps (ஏர்டெல்)
கொல்கத்தாவில் – 482.02Mbps (ஜியோ) 33.83Mbps (ஏர்டெல்)
வாரணாசியில் – 485.22Mbps (ஜியோ) 516.57Mbps (ஏர்டெல்)

ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது, வாரணாசியை தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் ஜியோ தான் சிறந்த 5ஜி பதிவிறக்க வேகத்தை கொண்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது.

காரணம் என்ன?

நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது ஜியோ வாங்கிய அதிக ஸ்பெக்ட்ரம் தான் இதற்கு காரணம்! அதனால் தான் ஜியோவின் 5ஜி வேகம் மிகவும் சிறப்பாக உள்ளது அதுமட்டுமின்றி, 700MHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைக் கொண்ட ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ மட்டும் தான்!

ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் சி-பேண்ட்டை மட்டுமே கொண்டுள்ளனர்! இதனால், ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவின் செயல்திறன் ஒப்பீட்டளவில் சற்றே குறைவானதாக இருக்கும்! எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 700MHz என்பது லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஆகும், இது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உட்புற சிக்னல் ஊடுருவலை (indoor signal penetration) குறைக்கிறது. எனவே, ஜியோ நிறுவனம் சி-பேண்டைப் பயன்படுத்தும் போது, அதன் செயல்திறன் நன்றாக இருக்கும்.