ஆண்ட்ராய்டு 13 உடன் அறிமுகமாகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி?

சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 அங்குல Super AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாக உதவும்.

ஆண்ட்ராய்டு 13

அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-A5460 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32எம்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கும்

ஸ்டோரேஜ்

இந்த கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்

கனெக்டிவிட்டி

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5.1, GPS/ A-GPS, IR பிளாஸ்டர், USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி இணையத்தில் கசிந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.