சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான போன்களுள் ஒன்று சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி. இது தற்போது Android 13 அடிப்படையிலான One UI 5.0 அப்டேட்-ஐ பெற்றுள்ளது. இந்த புதிய அப்டேட் டிசம்பர் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே கிடைத்துள்ளது.
கேலக்ஸி ஏ53 5ஜி
ஐரோப்பிய நாடுகளுக்கு தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனுக்கான ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாடுகளில் உள்ள கேலக்ஸி ஏ53 5ஜி பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் + 12 அல்ட்ரா வைடு சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பிராசஸர்
கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் Exynos 1280 பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைத்துள்ளது.
மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் இருக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கனெக்டிவிட்டி
RIP67-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்புடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பைக் கொண்டது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. கூடவே 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.






