இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் (5G Network) சேவை அறிமுகப்படுத்தியதில் இருந்து மக்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சந்தேகமே 4ஜி நெட்வொர்க்கில் (4G Network) இயங்கிக் கொண்டிருக்கும் தங்களுடைய டேட்டா பிளானை வைத்து, 5ஜி சேவையை பயன்படுத்த முடியுமா? என்பது தான்.
Jio True 5G & Airtel 5G Plus
இந்த சந்தேகம் உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது தான். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டு முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்கள், ஏற்கனவே இந்தியாவில் அதன் Jio True 5G மற்றும் Airtel 5G Plus சேவைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதை மக்கள் பயன்படுத்தவும் துவங்கிவிட்டனர்.
இரண்டு நிறுவனங்களும் தங்களின் 5G நெட்வொர்க்குகளின் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆரம்ப கருத்துக்களைப் பெற வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றனர். ஜியோ தனது 5G சேவையை ரேண்டம் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. அதே நேரத்தில் ஏர்டெல் பயனர்கள் ஏற்கனவே 4G சேவைக்கு சொந்தமான டேட்டா பாக்கெட்டில் இருந்து 5G சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இது கட்டாயம்!
ஜியோவிடம் இருந்து இலவசமாக 5G இன்வைட் லிங்க் ஐ பெற, Jio பயனர்கள் ரூ. 239 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்வதை ஜியோ கட்டாயமாக்கியுள்ளது. ஜியோ ரூ. 239 அல்லது அதற்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது, நீங்கள் 5G இன்வைட்டைப் (Jio True 5G Invite) பெற்றவுடன், 5ஜி பயன்படுத்தத் துவங்கலாம் என்று நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக, இதை நீங்கள் பயன்படுத்த, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5G கவரேஜ் மண்டலத்தில் (5G coverage area) நீங்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
இந்த முறைப்படி, நீங்கள் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ பயனர்களுக்கு 5ஜி சேவையைப் பெற வரம்பு என்று எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டேட்டா அளவு பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
1 ஜிபிபிஎஸ் வேகம்
ஜியோ தனது வெல்கம் ஆஃபரின் (Jio welcome offer) கீழ், வாடிக்கையாளர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. எனவே ஜியோ பயனர்களுக்கு, 5G மூலம் அவர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவு குறித்து கவலைப்பட தேவையில்லை. இருப்பினும், ஏர்டெல் பயனர்களுக்கு அப்படி இல்லை.
ஏர்டெல் பயனர்களுக்கு, 5G ஆனது பயனர்களின் டேட்டா நுகர்வை அதிகரிக்கப் போகிறது. இது அதிக டேட்டா-நுகர்வு பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு வழக்குகளையும் உயிர்ப்பிக்க போகிறது. இன்ஸ்டாகிராம் அல்லது அதைப் போன்ற சாதாரண பயன்பாடுகளைப் பயன்படுத்தும் போது கூட, 4G உடன் ஒப்பிடும்போது 5G உடன் அதிக டேட்டா நுகர்வு இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
சிக்கல்!
இதன் பொருள் ஏர்டெல் பயனர்கள் தற்போது தங்கள் வழக்கமான திட்டங்களில் 5G ஐப் பயன்படுத்த முயற்சிக்கலாம், இது செயல்படும் என்பது தான் பேசிக் கான்செப்ட்டாக இருக்கிறது. இருப்பினும், நீங்கள் 4G திட்டத்தை வைத்துக்கொண்டு, 5ஜி சேவையை பயன்படுத்த நினைக்கும் போது, உங்கள் ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா வேகமாகத் தீர்ந்துவிடுகிறது. இதனால், ஏர்டெல் பயனர்கள் மீண்டும்- மீண்டும் டேட்டாவை ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இது உண்மையில் உங்கள் பணத்தை அதிகமாகச் செலவிடச் செய்கிறது. உங்கள் டேட்டா 4G ஐ விட, 5G உடன் வேகமாக நுகரப்படுவதே இதற்கான காரணமாகும்.
ரூ.65 4ஜி டேட்டா வவுச்சர்
இதைச் செய்ய வாடிக்கையாளர்கள் 4G டேட்டா வவுச்சர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான டேட்டாவை பெற்று மகிழலாம். தெரியாதவர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.65 விலைக்கு புதிய 4ஜி டேட்டா வவுச்சரை அறிவித்துள்ளது. இதனுடன் 4ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் மூலம் இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் போது 2ஜிபி கூடுதலாக இலவசமாகக் கிடைக்கிறது.






