இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் 20 5ஜி போன் இன்று வெளியானது. பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கும் 5ஜி போன் இதுவாகும். பட்ஜெட் போனாக வெளியாகி இருந்தாலும் இதில் 3ஜிபி வரையிலான விர்சுவல் ரேம், 50MP கேமரா, 12 5ஜி பேண்ட்கள், 5000mAh பேட்டரி, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஹைபர் விஷன் கேமிங் ப்ரோ டிஸ்ப்ளே போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
டிஸ்ப்ளே
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைல் 6.6 அங்குல முழு HD plus டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. மேலும் இதில் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்ப்ளிங் ரேட்டும் இருக்கிறது. மேலும் விளையாடுக்கென ஹைபர் விஷன் கேமிங் மற்றும் ப்ரோ டிஸ்ப்ளேவையும் கொண்டு இருக்கிறது.
கேமரா
இந்த மொபைலில் 50மெகா பிக்சல் சூப்பர் நைட்ஸ்கேப் கேமரா முதன்மை கேமராவாக வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர 2 மெகா பிக்சல் கேமரா ஒன்றும் இருக்கிறது. இது தவிர முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 8 மெகா பிக்சல் கேமரா ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக LED ஃப்ளாஷ் ஒன்றும் இருக்கிறது.
சிப்செட் & இயங்குதளம்
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 810 ப்ராசஸர் இருக்கிறது. இது 6 நானோ மீட்டரில் உருவாக்கப்பட்ட ஒரு 2.4Ghz octa-core ப்ராஸசர் ஆகும். மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தின் மேல் X OS 10.6 ல் இயங்குகிறது.
மெமரி
இந்த மொபைலில் 4ஜிபி பிசிகல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே இதில் விர்சுவல் ரேம் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக 3 ஜிபி விர்சுவல் ரேம் வசதியையும் பெற முடியும். மொத்தத்தில் இந்த மொபைல் 7 ஜிபி ரேம் வசதியைக் கொண்டு இருக்கிறது. சேமிப்பு வசதிக்கென இந்த மொபைலில் 128ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை ஒரு மைக்ரோ SD கார்டு மூலம் ஒரு TB அளவுக்கு அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
5ஜி
5ஜி மொபைலான இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி போனில் 12 5ஜி பேண்ட்கள் இருக்கின்றன. இந்த ரூ 12,000 விலைப்பிரிவில் அதிகபட்ச 5ஜி பேண்டுகளைக் கொண்டு இருப்பது இந்த மொபைல் மட்டுமே.
நிறங்கள்
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைல் ஸ்பேஸ் ப்ளூ (space blue), ப்ளாஸ்டர் க்ரீன் (Blaster Green), ரேசிங் ப்ளாக் (racing black) ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது.
பேட்டரி
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைலில் 5000mAh power monster பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதை சார்ஜ் செய்ய 18W fast charging சப்போர்ட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டி
இந்த 5ஜி மொபைலில் டேட்டா ட்ரான்ஸ்பர் மற்றும் சார்ஜிங் போன்றவற்றிற்கு என Type C போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர Wi-Fi, GPS, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி வசதிகளும் உள்ளன. பாதுகாப்புக்கு என இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைலில் பிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை
இவ்வளவு வசதிக் கொண்டு இருக்கும் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைலின் விலை ரூ 11,999 மட்டுமே. இந்த மொபைலை விரைவில் ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். இதோடு இந்த மொபைலுக்கு வங்கி அட்டை சலுகைகளும், கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கும்.






