வெறும் ரூ 8,999க்கு 6000mAh பேட்டரி, 7ஜிபி ரேம் – கலக்கும் இன்பினிக்ஸ் ஹாட் ப்ளே!

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட ஹாட் சீரிஸின் ‘இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மொபைலைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது ஹாட் சீரிஸின் இன்னொரு மொபைலான ‘இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே’ மொபைலைப் பற்றி பார்க்கலாம். பட்ஜெட் விலையில் பலவிதமான வசதிகளோடு இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது.

டிஸ்ப்ளே

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே மொபைல் 6.82 அங்குல HD plus LCD டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. மேலும் இதில் 90Hz ரிப்ரெஷ் ரேட்டும் பஞ்ச் ஹோல் டிசைனும் இருக்கிறது.

கேமரா

இந்த மொபைலில் 13மெகா பிக்சல் முதன்மை கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 8 மெகா பிக்சல் கேமரா ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக Quad LED ஃப்ளாஷ் ஒன்றும் இருக்கிறது.

சிப்செட் & இயங்குதளம்

இது ஒரு இரட்டை சிம் 4ஜி மொபைல் ஆகும். இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி37 ப்ராசஸர் இருக்கிறது. இது A53 Quad Core (2.3Ghz) ப்ராஸசர் ஆகும். மேலும் இது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது.

மெமரி

இந்த மொபைலில் 4ஜிபி LPDDR4X பிசிகல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே இதில் விர்சுவல் ரேம் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக 3 ஜிபி விர்சுவல் ரேம் வசதியையும் பெற முடியும். மொத்தத்தில் இந்த மொபைல் 7 ஜிபி ரேம் வசதியைக் கொண்டு இருக்கிறது. சேமிப்பு வசதிக்கென இந்த மொபைலில் 64ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை ஒரு மைக்ரோ SD கார்டு மூலம் ஒரு 256GB அளவுக்கு அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும். இதற்கென தனியாக ஒரு மைக்ரோ SD ஸ்லாட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.

நிறங்கள்

4ஜி மொபைலான இந்த் இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே போன் லுனா புளூ, ஃபாண்டசி பர்பில், அரோரா கிரீன் மற்றும் ரேசிங் பிளாக் ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது.

பேட்டரி

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே மொபைலில் 6000mAh power monster பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதை சார்ஜ் செய்ய 18W fast charging சப்போர்ட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே இதில் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இருக்கிறது.

கனெக்டிவிட்டி

இந்த 4ஜி மொபைலில் டேட்டா ட்ரான்ஸ்பர் மற்றும் சார்ஜிங் போன்றவற்றிற்கு என Type C போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர DTS 3D ஆடியோ, Wi-Fi, GPS, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், OTG போன்ற கனெக்டிவிட்டி வசதிகளும் உள்ளன. பாதுகாப்புக்கு என இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 ப்ளே மொபைலில் பிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை

இந்த ஸ்மார்ட்போனின் விலை அறிமுக சலுகையாக ரூ. 8,999 என்ற விலைக்கு கிடைக்கும் இதன் விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. இதோடு இந்த மொபைலுக்கு வங்கி அட்டை சலுகைகளும், கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கும்.