மீடியாடெக் ஆக்டா கோர் ப்ராசஸர், 5000mAh பேட்டரியுடன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி இருக்கிறது விவோ Y02 பட்ஜெட் மொபைல்.
பார்ப்பதற்கு ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் (Mid-range Smartphone) போல மிகவும் ஸ்டைல் ஆக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.8,999 என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பினாலும் சரி.. நம்பாவிட்டாலும் சரி.. அதுதான் உண்மை! இது என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கிறது? பார்க்கலாம்!
இந்த ஸ்மார்ட்போன் – பிரபல சீன மொபைல் தயாரிப்பாளர் ஆன விவோவின் (Vivo) லேட்டஸ்ட் மாடல்! இது விவோ நிறுவனத்தின் ஒய் சீரீஸின் (Y Series) கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.
டிஸ்பிளே
டிஸ்பிளேவின் மேல் புறத்தில் – வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச், ரியர் கேமரா செட்டப்பில் ரவுண்ட் கேமரா ஐலேண்ட் என விலையை மிஞ்சும் வடிவமைப்பைக் கொண்டு இருக்கிறது இந்த மொபைல். டூயல் சிம் ஆதரவை கொண்டுள்ள Vivo Y02 ஸ்மார்ட்போன் ஆனது 6.51 அங்குல அளவிலான HD+ halo full screen டிஸ்பிளேவோடு வந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே 720×1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவை வழங்குகிறது.
கேமரா
கேமராக்களை பொறுத்தவரை, பின்பக்கத்தில், ஒரு 8 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. அது வட்ட வடிவிலான ஒரு கேமரா ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளது மற்றும் அதில் எல்இடி ப்ளாஷ் ஒன்றும் அடங்கும்! முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை செய்யவும் ஒரு 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது. மேலும், Time-Lapse, Bokeh Mode மற்றும் Face Beauty போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
ப்ராசஸர், ரேம் & ஸ்டோரேஜ்
விவோ Y02 ஆனது 3ஜிபி ரேம், 32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டு இருக்கிறது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜிற்காக இதில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஒன்றும் உள்ளது. இதன் மூலம் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.
சிப்செட்
இந்த விவோ Y02 மொபைலில் மீடியாடெக் ஆக்டா கோர் ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த போனை திறன்பட பயன்படுத்த முடியும்.
பேட்டரி
விவோ ஒய்02 ஸ்மார்ட்போனில் மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட்டை பயன்படுத்தி 10W சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ரூ.9000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி இருப்பது உண்மையிலேயே மற்ற எல்லா குறைகளையும் காணாமல் அடிக்கச்செய்யும் ஒரு அம்சம் ஆகும்!
அம்சங்கள்
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது Android 12ல் இயங்கும் Funtouch 12 இயங்குதளத்தில் இயங்குகிறது, அதாவது Gmail Go, YouTube Go மற்றும் Maps Go போன்ற ஆப்களின் தொகுப்பை நீங்கள் பெறுவீர்கள். ஆர்க்கிட் ப்ளூ மற்றும் காஸ்மிக் கிரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் இந்த விவோ Y02 மொபைல் கிடைக்கிறது
கனெக்டிவிட்டி
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, இது 4G VoLTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவைகளைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஃபிங்கர் ஃபிரிண்ட் ஸ்கேனர் இல்லை, ஆனால் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது!






