
சாம்சங் (Samsung) நிறுவனம், தனது சில ஸ்மார்ட்போன்களுக்கு, லேட்டஸ்ட் அப்டேட் வழியாக புதிய அம்சங்களை வழங்கி இருக்கிறது. அதென்ன அப்டேட்? அதன் மூலம் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன? அவைகள் எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும்? பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ சீரீஸ், கேலக்ஸி எம் சீரீஸ் (Galaxy M Series) மற்றும் கேலக்ஸி எஃப் சீரிஸ் (Galaxy F Series) ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 அப்டேட்டை (One UI 5.0 Update), வெளியிட தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சில கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு One UI 5.0 அப்டேட்டை ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
M சீரீஸ் போன்கள்
சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி கீழ்கண்ட M சீரிஸ் போன்கள் அப்டேட்டை பெற இருக்கின்றன.
- கேலக்ஸி எம்53 (Galaxy M53)
- கேலக்ஸி எம்52 5ஜி (Galaxy M52 5G)
- கேலக்ஸி எம்33 (Galaxy M33)
- கேலக்ஸி எம்32 5ஜி (Galaxy M32 5G)
- கேலக்ஸி எம்32 (Galaxy M32)
- கேலக்ஸி எம்13 5ஜி (Galaxy M13 5G)
இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர்த்து மற்ற கேலக்ஸி எம் மற்றும் கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் கூட விரைவில் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வெளியிடப்படும் என்பதையும் சாம்சங் உறுதிப்படுத்தி உள்ளது.
A சீரீஸ் போன்கள்
கீழ்கண்ட A சீரிஸ் போன்கள் அப்டேட்டை பெற இருக்கின்றன.
- சாம்சங் கேலக்ஸி ஏ33 (Galaxy A33)
- கேலக்ஸி ஏ73 (Galaxy A73)
A சீரிஸில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் முதலில் ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை வெளியிட இருக்கிறது. உங்களிடம் (மேற்குறிப்பிட்ட) கேலக்ஸி ஏ சீரீஸ், கேலக்ஸி எம் சீரிஸ் அல்லது கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் இருந்தால், உங்கள் போனிற்கு கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 அப்டேட் கிடைக்கும். அது கிடைத்ததும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் – அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்!
இன்ஸ்டால் செய்வது எப்படி?
உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு (Settings) செல்லவும் – அங்கே சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) என்கிற ஆப்ஷனை தேடி கண்டுபிடித்து, அதை கிளிக் செய்யவும்.
பின்னர் உங்கள் போனிற்கு, ஏதேனும் புதிய சாஃப்ட்வேர் அப்டேட் வந்துள்ளதா என்று ஸ்கேன் செய்யப்படும். ஒருவேளை புதிய அப்டேட் வந்து இருந்தால், உங்களுக்கு காண்பிக்கப்படும்.
அதை ட்வுன்லோட் செய்யவும். பின்னர் ஸ்க்ரீனில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றி அதை இன்ஸ்டால் செய்து முடிக்கவும்.
இந்த செயல்முறையை செய்து முடித்ததும், உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் (Restart) செய்யும்படி அறிவுறுத்தப்படும். அதை செய்யவும்; அவ்வளவு தான் வேலை முடிந்தது!
என்னென்ன புதிய அம்சங்கள் கிடைக்கும்?
இந்த அப்டேட்டை செய்வதன் மூலம் சில புதிய அம்சங்கள் கிடைக்கும்.
லாக் ஸ்க்ரீன் கஸ்டமைசேஷன் (Lock screen customisation)
இதை கொண்டு வால்பேப்பர், கிளாக் ஸ்டைல் மற்றும் நோட்டிஃபிகேஷனை கஸ்டமைஸ் செய்யலாம். இதை செய்ய லாக் ஸ்க்ரீனை லாங் பிரஸ் செய்தால் போதும். இந்த அப்டேட்டின் கீழ் ஒவ்வொரு தொடர்புக்கும் (Contact) வெவ்வேறு கால் பேக்கிரவுண்டை (Call Background) செட் செய்யலாம். இதன் மூலம் யார் அழைக்கிறார்கள் என்பதை எளிதாக கண்டறிய முடியும்.
ஸ்பிளிட் ஸ்கிரீன் வியூ, போட்டோ வாட்டர்மார்க் மற்றும் ஸ்டிக்கர்ஸ்!
இந்த அப்பேட்டின் கீழ், ஸ்பிளிட் ஸ்கிரீன் வியூ (Split screen view) எனப்படும் அம்சம் கிடைக்கும். ஒரு எளிமையான ஸ்வைப் கெஸ்சர் (Swipe Gesture) மூலம் மல்டி விண்டோக்களை (Multi window) உருவாக்க முடியும்.
சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஒன் UI 5.0 அப்டேட் ஆனது ஒவ்வொரு புகைப்படத்தின் மூலையிலும் தேதி, நேரம் போன்ற கஸ்டமைஸ் தகவலைக் கொண்ட வாட்டர்மார்க் (WaterMark) ஒன்றை சேர்க்கும் வசதியை உங்களுக்கு வழங்கும்.
கடைசியாக, இந்த அப்டேட் ஆனது உங்கள் கேலரியில் (Gallery) உள்ள புகைப்படங்களிலிருந்து புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கவும் உதவுகிறது.





