ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மொபைலுக்கு ரூ.1000 தள்ளுபடி!

ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 12 சீரிஸை வெளியிட இருக்கும் நிலையில், அதன் முந்தைய சீரிஸான ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் விலையை குறைத்துள்ளது.

தள்ளுபடி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஸ்டோரேஜ் முன்பு ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போன் ரூ.19,999-க்குக் கிடைக்கிறது. அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மொபைல் ரூ.19,790-க்கு பட்டியிலிடப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிக் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்பிளே

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67 அங்குல Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. 700 முதல் 1200 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் வசதியும் இதில் இருக்கிறது.

பிராசஸர்

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் உடன் ஏழு 5G பேண்டுகளுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. எனவே இந்த 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். Android 11 ஐ அடிப்படையாக கொண்ட MIUI 12.5 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது.

கேமரா

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 108 MP பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா லைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16 MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர LED ப்ளாஷ் ஒன்றும் இருக்கிறது. இந்த மொபைல் மூலம் 4K வீடியோ கூட எடுக்கலாம்.

மெமரி

128GB 6GB RAM, 128GB 8GB RAM, 256GB 8GB RAM என மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த மொபைல் கிடைக்கிறது. இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள வசதியாக ஒரு மைக்ரோ SD ஸ்லாட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இதன் இண்டர்னல் மெமரியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

பேட்டரி

இந்த மொபைல் Mysterious Black, Forest Green, Timeless Purple ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மொபைல் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனை 15 நிமிடம் சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என ரெட்மி கூறுகிறது.

கனெக்டிவிட்டி

இந்த மொபைலின் பிங்கர் ப்ரிண்ட் சென்சார் அதன் பவர் பட்டனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைலின் எடை 202 கிராம் அதேபோல் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5.1, GPS/ A-GPS, IR பிளாஸ்டர், USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.