ஷாவ்மி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் தனது ரெட்மி நோட் 12 சீரிஸை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த 12 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கிறது. இந்த ரெட்மி நோட் 12 சீரிஸில், நோட் 12, நோட் 12 ப்ரோ, நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஆகிய மொபைல்கள் வெளியாகி இருக்கின்றன. ரெட்மி நோட் 12 சீரிஸின் ஹைலைட்டான விஷயமக 200 மெகா பிக்சல் கேமரா இருக்கிறது.
இந்த மொபைல்கள் 5ஜியை ஆதரக்கிறது. அதாவது இந்த மொபைலில் ஜியோ 5ஜி மற்றும் ஏர்டெல் 5ஜியை எந்த வித அப்டேட்டும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
டிஸ்ப்ளே
இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் மொபைல் 6.67 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. கூடவே 394 ppi அடர்த்தியையும், 20:9 Aspect Ratioவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைல் 120Hz வரையிலான அடாப்டிவ் ரிஃப்ரெஷ் ரேட்டையும், 240Hz வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களைக் காட்டும் திறனுடன் HDR10+, டால்பி விஷன் ஆதரவுடன், 1920Hz PWM Dimming வசதியையும் கொண்டுள்ளது. இதுதவிர கார்னிங் கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பாஇயும் கொண்டுள்ளது. மொத்தத்தில் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் டிஸ்ப்ளேவில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.
கேமரா
இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் மொபைலின் மற்றொரு ஹைலைட்டான விஷயம்.. அதன் கேமரா. ப்ரோ கிரேடு சாம்சங் HPX சென்சாருடைய 200 மெகா பிக்சல் அல்ட்ரா-ஹை ரெஸ் கேமராவைக் கொண்டுள்ளது இந்த மொபைல். கூடவே இந்த கேமராவில் சூப்பர்-OIS (Optical image Stablization) வசதியும் இருக்கிறது. இதனால் இந்த மொபைலில் எடுக்கும் படங்கள் மற்றும் வீடியோ நடுக்கம் இன்றி தெளிவாக இருக்கும். 200 மெகா பிக்சல் இருப்பதால் இதன் படங்களை 16 மடங்கு ஜூம் செய்தாலும் அதன் துல்லியம் மாறாது. அதே போல் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கும் புகைப்படங்களும் சிறப்பாக, தெளிவாக இருக்கும். இந்த மொபைல் மூலம் 10-bit RAW பார்மேட்டில் புகைப்படங்களை பதிவு செய்யமுடியும். மொத்தத்தில் மொபைல் கேமராவில் இதுஒரு மைல்கல் என்றே சொல்லவேண்டும்.
மெயின் சென்சார் தவிர 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா ஒன்றும் இருக்கிறது. இது 120டிகிரி ஃபீல்ட் ஆப் வியூ-வைக் கொண்டுள்ளது. அதுதவிர 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஒன்றும் பின்பக்கத்தில் உள்ளது.
முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கேமராக்கள் 4K வீடியோ, 960 FPS at 720P போன்றவற்றைக் கொண்டுள்ளது.
செப்செட்
இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் மொபைலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு 6nm ப்ராஸசர் ஆகும். இது 10 வித 5ஜி பேண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இது 2.6GHz திறனைக் கொண்டிக்கிறது. கூடவே மொபைல் சூடாவதைக் குறைக்க பெரிய வேப்பர் சேம்பர்களைக் கொண்டுள்ளது. இதனால் இது கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
இயங்குதளம்
இரட்டை 5ஜி சிம் மொபைலான இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் மொபைல் ஆண்ட்ராய்டு 12ன் மேல் MIUI 13 கொண்டு கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தில் வேலை செய்கிறது. இதற்கு இரண்டு வருட சாப்ட்வேர் அப்டேட்டும், 4 வருட செக்யூரிட்டி அப்டேட்டும் வழங்கப்படும் என்று ஷாவ்மி கூறியுள்ளது.
மெமரி
இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் மொபைல் 8GB RAM, 12GB RAM என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. இது 256ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. ரேம் LPDDR4X வகையைச் சேர்ந்ததாகவும் இண்டர்னல் மெமரி UFS 2.2 வகையைச் சேர்ந்தும் இருக்கிறது.
பேட்டரி
இந்த மொபைல் 4980mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 120W Hyper charge வசதி கொண்ட சார்ஜர் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த மொபைலை வெறும் 19 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
வசதிகள்
இதன் பேக் பேனல் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 208.4 கிராம். இதில் Side mounted ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர Hi-Res ஆடியோ வசதி, Wi-Fi, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5mm ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.2, GPS, NFC போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. கூடவே இந்த மொபைலில் டைப் சி வசதியும் இருக்கிறது.








