ஏர்டெல்லின் 2 ஜிபி இலவச டேட்டா! எந்தெந்த திட்டத்துக்கெல்லாம் கிடைக்கும்?

Highlights

  • ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
  • இலவச டேட்டாவைப் பெற ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2ஜிபி இலவச டேட்டாவை தற்போது வழங்குகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks app) பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய முடியும். பயனர்கள் இந்த ஆப் வசதியில் ரூ.265, ரூ.359, ரூ.549, ரூ.699, ரூ.719 மற்றும் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2ஜிபி இலவச டேட்டாவை பெற முடியும். இப்போது இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

 

ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

 

ரூ.359 திட்டம் ஏர்டெல்

ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app அணுகல், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது.  இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

 

ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் Xstream mobile app பயன்பாடு, இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், அப்பல்லோ 24|7 சர்க்கிள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

 

ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.719 ப்ரிபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில்கிடைக்கிறது. ஏர்டெல் ப்ரீபெய்ட்

 

ப்ரீபெய்ட் ரூ.839 திட்டம்

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. கூடவே வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. இந்த ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.