

நாடு முழுவதும் 5G வெளியீட்டை விரிவுபடுத்தும் வேலைக்கு மத்தியில், ஜியோ நிறுவனம் இந்தியாவில் இப்போது ரூ.899 மற்றும் ரூ.349 என இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான பல்வேறு நன்மைகளும் கிடைக்கிறது.
இந்தியாவின் பல இடங்களில் இப்போது 5ஜி சேவை கிடைக்கிறது. ஏர்டெல் (Airtel) நிறுவனமும், ஜியோ (Jio) நிறுவனமும் ஒன்றுடன் ஒன்று முந்திக்கொண்டு, அதன் 5ஜி சேவையை நாட்டில் பரவலாக விரிவுபடுத்தி வருகிறது.
இது 4ஜி திட்டம் தான்.. ஆனால், 5ஜி கிடைக்கும்.!
இந்தத் திட்டங்கள் இரண்டுமே 4ஜி (4G) திட்டம் தான் என்றாலும் கூட, இது உங்களுக்கு இலவச 5ஜி நன்மைகளையும் வழங்குகிறது. எப்படி இலவசமாக 5ஜி டேட்டாவை ஜியோ பயனர்கள் பெறலாம் என்பதை இறுதியில் பார்க்கலாம். அதற்கு முன்பாக, இந்த 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் உங்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.
வேலிடிட்டி
ரூ.349 மற்றும் ரூ.899 திட்டங்கள் முறையே 30 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 2.5 ஜிபி டேட்டா போன்ற பல நன்மைகளை இத்திட்டங்கள் வழங்குகிறது. இதற்கிடையில், ஜியோ 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
ரூ. 349 திட்டம்
ஜியோ ரூ 349 ரீசார்ஜ் திட்டம் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் மொத்த டேட்டா பலன் 75 ஜிபி ஆகும். இந்தத் திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளையும், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. இது 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது. இது இலவச 5ஜி அணுகலுடன் வருகிறது.
ஜியோ ரூ.899 திட்டம்
ரூ.899 ஜியோ ரீசார்ஜ் திட்டமும் அனைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இத்திட்டம் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. மொத்தமாக இந்த திட்டம் 225 ஜிபி டேட்டாவை தருகிறது. இந்த திட்டமும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான அணுகலை வழங்குகிறது. தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால், இணைய வேகம் 64Kbps ஆகக் குறையும்.
5ஜி உபயோகிப்பது எப்படி?
ரூ.349 திட்டத்தைப் போலவே, தகுதியான பயனர்கள் 5G வெல்கம் ஆஃப்பர் சலுகைக்கு மேம்படுத்தப்படுவார்கள். வெல்கம் ஆஃப்பர் கிடைக்கும் பயனர்கள் தாராளமாக 5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தலாம்.





