
இன்று நடைபெற்ற சாம்சங் அன்பேக்டு (Samsung Unpacked) நிகழ்வில் கேலக்ஸி S23 சீரிஸில் மூன்று மொபைல்கள் வெளியாகின. இதில் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த அல்ட்ராவோடு சேர்த்து, கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் ஆகிய மொபைல்களும் வெளியாகின. அல்ட்ராவில் இருந்த ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், வயர்லெஸ் சார்ஜிங், டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உட்பட பல அம்சங்கள் இந்த இரண்டு மொபைல்களிலும் இருந்தன. இந்த மொபைல்களின் அம்சங்களை விரிவாக இப்போது பார்க்கலாம்.
திரை
கேலக்ஸி S23 மொபைலில் Dynamic AMOLED 2X டிஸ்ப்ளேவுடன் கூடிய 6.1 அங்குல FHD+ திரை வழங்கப்பட்டு இருக்கிறது. அதேவேளையில் கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைலில் 6.6 அங்குல FHD+ திரை வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இரண்டு மொபைல்களும் 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. இதோடு ‘விஷன் பூஸ்டரும்’ வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி S23 மொபைலானது 70.9 x 146.3 x 7.6mm அளவில் 168 கிராம் எடையில் வெளியாகி இருக்கிறது. அதே வேளையில் கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைலானது 76.2 x 157.8 x 7.6mm அளவில் 196 கிராம் எடையில் வெளியாகி இருக்கிறது.
கேமரா
கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 ப்ளஸ் என இரு மொபைல்களிலும் பின்பக்கத்தில் மூன்று முன்பக்கத்தில் ஒன்று என மொத்தம் 4 கேமராக்கள் இடம்பெற்று இருக்கின்றன. இதில் முதன்மை கேமராவாக f1.8 அப்பசர் உடைய 50MP வைடு ஆங்கிள் கேமரா உள்ளது. இதனையடுத்து 12MP அல்ட்ரா வைடு கேமரா ஒன்றும், 10MP டெலிபோட்டோ கேமரா ஒன்றும் பின்பக்கத்தில் இருக்கிறது. கூடவே ஒரு LED லைட் ஒன்றும் உள்ளது.
செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்க்கொள்ளவும் முன்பக்கத்தில் 12MP கேமரா ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
சிப்செட்
கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் போலவே இந்த இரு மாடல்களூம் சமீபத்திய முதல்தர சிப்செட்டான ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இதனால் மொபைல் திறம்பட செய்ல்படும்.
இயங்குதளம்
அதுபோல சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் போலவே ஆண்ட்ராய்டு 13 மேல் கட்டமைக்கப்பட்ட சாம்சங்கின் One UI5.1 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கென Samsung Knox, Samsung Knox Vault போன்றவையும் இந்த இரு மொபைல்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
மெமரி
கேலக்ஸி S23 மொபைல் 3 விதமான மெமரி வேரியண்ட்களில் வெளியாகிறது.
8 GB ரேம் + 128 GB சேமிப்புத்திறன்
8 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்
8 GB ரேம் + 512 GB சேமிப்புத்திறன்
ஆனால், கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைல் இரண்டு விதமான மெமரி வேரியண்ட்களில் மட்டுமே வெளியாகிறது.
8 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்
8 GB ரேம் + 512 GB சேமிப்புத்திறன்
பேட்டரி
கேலக்ஸி S23 மொபைலில் 3900mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான சார்ஜரை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். இவ்வாறு சார்ஜ் செய்யும் போது 0% முதல் 50% வரையிலான சார்ஜை 30 நிமிடங்களில் செய்ய முடியும். இது தவிர இந்த மொபைலை WPC முறையில் வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.
அதுவே கேலக்ஸி S23 ப்ளஸ் மொபைலில் 4700mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கபட்டுள்ளது. ஆனால், இதற்கும் சார்ஜரை தனியாக விலை கொடுத்தே வாங்க வேண்டும். இவ்வாறு சார்ஜ் செய்யும் போது 0% முதல் 65% வரையிலான சார்ஜை 30 நிமிடங்களில் செய்ய முடியும். இது தவிர இந்த மொபைலையும் WPC முறையில் வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.

கனெக்டிவிட்டி
இந்த இரு மாடல்களும் 5G மொபைல்கள் ஆகும். இந்த மொபைல்களில் LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct Bluetooth V5.3 போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி வசதிகளும் இந்த கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் இருக்கிறது. இதுதவிர IP68 ரேட்டிங்ஸோடு கூடிய வாட்டர் ரெஸிஸ்டன்ஸ், தூசு, அழுக்கு தடுப்பு வசதியும் இருக்கிறது.
விலை
சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் மொபைல்களின் இந்திய விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.









