

புதிய ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைல் இன்று வெளியானது. இந்த மொபைல் ஹாசில்ப்ளேட் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் ஜென் 2 ப்ராசஸர், டால்பி விஷன், 8கே வீடியோ, டால்பி அட்மாஸ் சவுண்ட் என பலவிதமான சிறப்பம்சங்களோடு வெளியாகி இருக்கிறது. கூடவே இந்த மொபைலை 25 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்ற உறுதியுடன் வெளிவந்துள்ளது. இவை தவிர இதில் இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள் என்ன? எத்தனை வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது? இதன் விலை என்ன போன்ற விவரங்களைப் பார்க்கலாம்.
திரை
ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைல் 6.7 அங்குல சூப்பர் ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 525ppi அடர்த்தியுடன் கூடிய 3216 x 1440 பிக்சல் திரையைக் கொண்டுள்ளது. இது 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 20.1:9 ஆஸ்பெக்ட் ரேஷியோவையும் கொண்டுள்ளது. மேலும் இது 1000 டச் சாம்ப்ளிங் உடன் கூடிய sRGB டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா க்ளாஸினால் பாதுகாக்கப்படுகிறது.
டால்பி விஷன்
இதன் திரையானது 10-bit ஆதரவு மற்ற்கும் டால்பி விஷன் ஆதரவைக் கொண்டுள்ளது. இதனால் சிறந்த திரை அனுபவத்தைப் பெற முடியும்.

கேமரா
ஒன்ப்ளஸ் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது அதன் சிறப்பான ஹாசில்ப்ளேட் கேமரா தான். இந்த 11 சீரிஸிலும் முதன்மை கேமராவாக ஹாசில்ப்ளாட் கேமராவே வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.8 அப்பசர் உடைய 50 மெகாபிக்சல் சோனி IMX890 சென்சார் இருக்கிறது. மேலும் இதில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேப்ளேசேஷன் உள்ளது. இதனால் தெளிவான படங்களை எடுக்க முடியும். இதோடு 115டிகிரி கோணத்தை படம்பிடிக்கக்கூடிய 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு கேமராவும் உள்ளது. இதற்கென சோனியின் ஃப்2.2 அப்பச்சர் உடைய IMX581 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர பின்பக்கத்தில் 32 மெகாபிக்சல் உடைய சோனியின் IMX709 சென்சாருள்ள போர்ட்ரேட் டெலி கேமராவும் இருக்கிறது.
முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சோனியின் 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதிலும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி இருக்கிறது. இது தவிர இரட்டை LED ஃப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
வீடியோ
இந்த ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைல் மூலம் 24fpsல் 8K வீடியோவையும், 30/60fpsல் 4K வீடியோவையும் எடுக்க முடியும். இது தவிர 1080 வீடியோ 240fps வரை சப்போர்ட் செய்கிறது. 720 வீடியோ 480fps வரை சப்போர்ட் செய்கிறது.
ஆடியோ
இதில் ப்ரீமியம் லேப்டாப்களில் வழங்கப்படும் இரண்டு ‘ரியாலிட்டி’ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது டால்பி அட்மாஸ் சவுடை வழங்கக்கூடியது. இது ஆடியோ அனுபவத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் எனக் கூறப்படுகிறது.
ப்ராஸசர்
இந்த ஒன்ப்ளஸ் மொபைலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராஸ்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சமீபத்தில் வந்த ப்ரீமியம் ப்ராசஸர் ஆகும்.
ரேம்
இந்த மொபைலில் 16 GB LPDDR5X வகை ரேம் இருக்கிறது. மேலும் இது 128GB UFS3.1 மற்றும் 256GB UFS 4.0 வகை சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 44 ஆஃப்களை திறந்து வைத்தாலும் போன் ஹேங் ஆகாது என்று கூறப்படுகிறது. மேலும் ‘RAM-Vita’ என்ற AI தொழில் நுட்பமும் இந்த ரேமில் இருக்கிறது.
இயங்குதளம்
இந்த ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைல் ஆண்ட்ராய்டு 13 மேல் OxygenOS13 கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது. இதில் பலவிதமான AI வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் HyperBoost Gaming enging வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய வீடியோ கேம்களையும் தடை இன்றி விளையாட முடியும்.
பேட்டரி & சார்ஜிங்
இந்த ஒன்ப்ளஸ் 11 5ஜி மொபைலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது 100W SUPERVOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த மொபைலை 25 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இதில் பேட்டரி ஹெல்த் எஞ்சின் என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரியின் வாழ்நாளை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் பேட்டரி டேமேஜில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர இதில் Cryo-velocity VC கூலிங் சிஸ்டம் என்ற வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபேட்டரி சூடாவதைத் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
கனெக்டிவிட்டி
இந்த ஒன்ப்ளஸ் 11 5G மொபைலில் இன் – டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார். டைப் – சி போர்ட், Wi-Fi 6, ப்ளூடூத் 5.3, NFC, டூயல் பேண்ட் GPS, இரட்டை நானோ சிம் ஸ்லாட், ஃபேஸ் அன்லாக் போன்ற பலவிதமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
விலை
இந்த ஒன்ப்ளஸ் 11 5G மொபைல் 8GB + 128GB, 16GB + 256GB என இரண்டு விதமான வேரிய்ண்ட்களில் வெளியாகி இருக்கிறது.
8GB + 128GB = ரூ. 56,999
16GB + 256GB =ரூ. 61,999
இந்த மொபைலோடு 100W SUPERVOOC பவர் அடாப்டரும் வழங்கப்படுகிறது.







