

டெக்னோவின் இந்த புதிய ஸ்மார்ட்போனான Tecno POP 7 Pro மொபைலை ஏற்கனவே நைஜீரியா உட்பட சில நாடுகளில் அறிமுகமாகி விட்டது. இந்தியாவிற்குள் இந்த புதிய Tecno POP 7 Pro மொபைல் மிகவும் குறைந்த விலையில், ரூ.12,000 விலைக்குள் – புது மொபைல் வாங்க துடிக்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்று இப்போது பார்க்கலாம்.
மறுபதிப்பு
வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Tecno POP 7 Pro சாதனம், டெக்னோ ஸ்பார்க் கோ 2023 (Tecno Spark Go 2023) இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டெக்னோ நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போனை வரும் வாரம் அறிமுகம் செய்யுமென்று ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் துல்லியமான நாள் விபரம் இடம்பெறவில்லை.
டிஸ்ப்ளே
இந்த புதிய ஸ்மார்ட்போனின் ஸ்பெக்ஸ் (Specs) விபரங்களை பொறுத்தவரை, Tecno POP 7 Pro ஆனது 720p தெளிவுத்திறனுடன் கூடிய 6.6 அங்குல LCD டிஸ்பிளேவை (Display) கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
சிப்செட் & மெமரி
இது MediaTek Helio A22 சிப்செட் (Chipset) உடன் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்டோரேஜ் (Storage) பற்றி பேசுகையில், இது இரண்டு ரேம் விருப்பங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் (RAM) உடன் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 512ஜிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் (External storage) இடம் பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா
புதிய Tecno POP 7 Pro ஸ்மார்ட்போனின் கேமரா (Camera) அம்சம் பற்றி பார்க்கையில், இது 13MP பிரைமரி கேமரா மற்றும் QVGA டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இதன் முன்பக்கத்தில் 5MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
பேட்டரி
இது ஒரு 4ஜி மொபைல் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் USB-C போர்ட் வழியாக 10W சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை (Battery) பேக் செய்துள்ளது.
விலை
இந்த ஸ்மார்ட்போன் நைஜீரியாவில் 64,000 நைஜீரிய நைரா என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 11,428 விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, Tecno POP 7 Pro ஆனது இந்தியாவிலும் பட்ஜெட் போனாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறங்கள்
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் எண்ட்லெஸ் பிளாக் (Endless Black), யுயுனி ப்ளூ (Uyuni Blue) மற்றும் நெபுலா பர்பில் (Nebula Purple) ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முதல் 15,000 விலைக்குள் இப்போது 5ஜி (5G) போன்களே (5G Phones) கிடைக்கும் போது, இந்த போன் எப்படி போட்டியிடப் போகிறது என்பது ஆர்வத்தை தூண்டுகிறது.








