
ஒரு டிப்ஸ்டர் மூலம் கசிந்த விவரங்களின் படி iQoo Neo 8 மொபைலில் மீடியா டெக்கின் ஒரு முதன்மை சிப்செட் பொருத்தப்பட்டிருக்கலாம். இது மீடியா டெக் மூலம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நிறுவனத்தின் தற்போதைய iQoo Neo 7 தொடர் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது MediaTek இன் 5G சிப்செட்டான, Dimensity 9000 SoC உடன் வெளியாகி இருக்கிறது. இப்போது இந்த நியோ சீரிஸ் வரிசையில் அடுத்த போனை சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஐக்கூ அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iQoo Neo 8 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் வெளியாக இன்னும் சில காலம் ஆகும் என்றாலும், அதன் விவரக்குறிப்புகள் இப்போதே இணையத்தில் வெளிவரத் துவங்கி உள்ளன.
சிப்செட்
வெய்போவில், டிப்ஸ்டர் ‘டிஜிட்டல் சாட் ஸ்டேஷன்’ பகிர்ந்த விவரங்களின்படி , iQoo Neo 8 ஆனது Mediatek Dimensity 9200+ SoC மூலம் இயக்கப்படும். டிப்ஸ்டரின் கூற்றுப்படி, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Ace 2V ஆனது Dimensity 9000 SoC உடன் அறிமுகமான கடைசி மொபைல் ஆகும். கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட Dimensity 9200 சிப்செட்டை உபயோகிக்கப்போவதாக மீடியாடெக் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
டைமன்சிட்டி 9200
தைவானிய முன்னணி சிப் உற்பத்தி நிறுவனமான MediaTek அதன் தற்போதைய தலைமுறை ஃப்ளாக்ஷிப் சிப்செட்டான Dimensity 9200 SoC ஐ கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஆர்ம் கார்டெக்ஸ் X3 பிரைம் கோர் பொருத்தப்பட்ட இந்த சிப்செட், mmWave 5G மற்றும் sub-6GHz 5G நெட்வொர்க்குகளுக்கான ஆதரவை வழங்குகிறது. இது ARM Immortalis-G715 GPU-இயங்கும் முதல் மொபைல் ஃபிளாக்ஷிப்-கிரேடு சிப்செட் ஆகும். மேலும் இது ஆண்ட்ராய்டு சந்தையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்களில் ஒன்றாகும்.
டைமன்சிட்டி 9200+
MediaTek 9000 SoC ஆனது ஏற்கனவே Vivo X90 தொடர் ஸ்மார்ட்போன்கள், OnePlus Pad மற்றும் Oppo Find N2 Flip போன்ற முதன்மை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் மீடியா டெக் டைமன்சிட்டி 9000 சிப்செட்டில் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்து, மோனிகர் செய்யப்பட்ட MediaTek Dimensity 9000+ சிப்செட்டை உருவாக்கியது போன்றே தற்போதும் சிப்செட்டில் சில மாற்றங்களை செய்து இருக்கிறது.
சமீப காலங்களில் மற்ற போட்டியாளர்களை விட Oppo மற்றும் OnePlus சாதனங்களில் மீடியாடெக் நிறுவனத்தின் சிப்செட்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன என்று டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மற்றொரு Weibo இடுகையில் குறிப்பிடுகிறது.
வெளியீட்டுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் இருந்தாலும், Dimensity 9200+ சிப்செட் பற்றியோ அல்லது iQoo Neo 8 தொடர் ஸ்மார்ட்போன்கள் பற்றியோ இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான நிலைப்பாடு குறித்தோ, iQoo மற்றும் MediaTek நிறுவனங்களில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.








