ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 உடன் கீக்பெஞ்சில் காணப்பட்டது ASUS ROG போன் 7 மொபைலின் இந்திய பதிப்பு

Highlights

  • ASUS ROG Phone 7 உலகளாவிய பதிப்பு தரப்படுத்தல் தளத்தில் காணக் கிடைக்கிறது
  • இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 13ல் இயங்குகிறது.
  • இந்த மொபைல் 2023 ஆம் ஆண்டின் Q3 இல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

ASUS ROG Phone 7 மொபைலின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, ASUS ROG Phone 7 மொபைலின் கீக்பென்ச் (Geekbench) பட்டியலை பிரத்தியேகமாக அணுகியுள்ளோம். பட்டியலிடப்பட்ட இந்த மொபைல் முந்தைய கசிவுகளின்படி இந்திய பதிப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மொபைலானது  ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16ஜிபி ரேம் உடன் வெளிவர இருக்கிறது. ASUS ROG Phone 7 மொபைல் ஆண்ட்ராய்டு 13 மொபைல் OS இல் இயங்குவதாகவும் தெரிகிறது.

 

 கீக்பெஞ்சில் ASUS ROG PHONE 7

வெளியான தகவலின் படி வரவிருக்கும் ASUS ROG ஃபோன் 7 ஆனது ” ARM இம்ப்ளிமெண்டர் 65 ஆர்கிடெக்சர் 8 வேரியண்ட் 1 பகுதி 3406 வெர்ஷன் 0″வோடு வரும் ஒரு CPU இல் இயங்குகிறது.இதன் மூலம் இதில் குவால்காமில் இருந்து வெளியாகும் உயர்தர Snapdragon 8 Gen 2 சிப்செட் இருப்பது உறுதியாகிறது.இந்த சிப்செட் அதிகபட்ச க்ளாக்ஸ்பீடான 3.19GHz-ஐ கொண்டுள்ளது. மேலும் ஒரு முதன்மை கோர், நான்கு பெர்ஃபாமென்ஸ் கோர்கள் மற்றும் மூன்று எபிசியன்சி கோர்களைக் கொண்டுள்ளது. இந்த CPU ஆனது Adreno 740 GPU மற்றும் 16GB ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனாது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது.

ASUS ROG Phone 7 ஆனது, மேலே உள்ள ஹார்டுவேருடன், சிங்கிள் கோர் சோதனையில் 1,958 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 5,238 புள்ளிகளையும் பெற முடிந்தது. இந்திய பதிப்பு AI2205_C  என்னும் மாடல் எண்ணுடன் வருகிறது. அதேசமயம் கீக்பெஞ்சில் சமீபத்தில் காணப்பட்ட உலகளாவிய பதிப்பு AI2205_A மாடல் எண்ணைக் கொண்டிருந்தது. ASUS ROG ஃபோன் 7 இன் உலகளாவிய பதிப்பும் சிங்கிள் கோர் ஸ்கோர் 2,022 புள்ளிகள் மற்றும் மல்டி-கோர் ஸ்கோர் 5,719 புள்ளிகளுடன் சற்று சிறப்பாக செயல்பட்டது.

 

ASUS ROG ஃபோன் 7 (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்

ASUS ROG ஃபோன் 7 ஆனது Snapdragon 8 Gen 2 SoC, 16ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. ASUS ROG Phone 7 ஆனது 165Hz புதுப்பிப்பு வீதத்துடன் AMOLED திரையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க சிறப்பு குளிரூட்டும் ஹார்டுவேரோடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசிந்துள்ள சமீபத்திய சான்றிதழ் ஆவணங்களின்படி சீன பதிப்பு 65W பாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Asus ROG ஃபோன் 7 முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – குவால்காம் ஸ்நாப்டிராகன் 8 ஜென் 2
  • ரேம் – 16 ஜிபி
  • திரை – 6.85 அங்குலம் (17.4 செமீ)
  • பின் கேமரா – 64 எம்பி + 12 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
  • செல்ஃபி கேமரா – 32 எம்.பி
  • பேட்டரி – 6100 mAh