BIS சான்றிதழைப் பெற்றுள்ளது Samsung Galaxy F54 5G. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறதா?

Highlights

  • Samsung Galaxy F54 ஆனது SM-E546B/DS என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது.
  • இந்த மொபைல் விரைவில் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Samsung Galaxy F54 இந்தியாவில் Flipkart வழியாக விற்பனைக்கு வரும்.

 

SM-E546B/DS மாடல் எண் கொண்ட புதிய சாம்சங் ஃபோன் BIS சான்றிதழில் பட்டியலிடப்பட்டு இருப்பதை 91மொபைல்ஸ் பிரத்தியேகமாக கண்டறிந்துள்ளது. இந்த மொபைலின் விற்பனை பெயர் பட்டியலிடப்படவில்லை என்றாலும், அது Samsung Galaxy F54 5G ஆக இருக்கலாம் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. இது சாம்சங்கின் எஃப்-சீரிஸ் போன்களில் புதிய வரவாக இருக்கும் அல்லது தற்போதைய கேலக்ஸி எஃப்42 மொபைலின் ரீபிராண்டட் மொபைலாக இருக்கலாம். இந்த மொபைலைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை, ஆனால் போன் மிட்ரேஞ்ச் விலைப்பிரிவில் வரலாம் மேலும் 5G நெட்வொர்க் ஆதரவைக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மற்ற F-சீரிஸ் மாடல்களைப் போலவே, புதிய Samsung Galaxy F54 ஆனது சாம்சங்கின் சொந்த இ-காமர்ஸ் தளத்தைத் தவிர Flipkart ஆன்லைன் தளம் வழியாகவும் விற்கப்படும். இந்த போன் பிஐஎஸ் இணையத்தில் தோன்றியதால், விரைவில் அடுத்தடுத்டு கூடுதல் விவரங்கள் தெரிய வரும்.

Samsung Galaxy F14

இதுதவிர, Samsung Galaxy F14 மொபைலின் வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்ப விவரங்கள் 91mobiles மூலம் பிரத்தியேகமாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மொபைல் அடுத்த வார தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் 5ஜி நெட்வொர்க் ஆதரவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் விலை சுமார் 15,000 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரெண்டர்கள், மொபைல் பச்சை மற்றும் ஊதா வண்ண விருப்பங்களில் வருவதையும்,  பாலிகார்பனேட்டால் தயாராகி இருப்பதையும் காட்டுகிறது.

மொபைலின் பின்புறத்தில் இரட்டை கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் இருக்கும் என்று ரெண்டர்கள் காட்டுகின்றன. விளிம்புகள் சற்று வளைந்திருக்கும். இது கைகளில் சிறந்த பிடிமானத்தை வழங்கும். முழு விவரக்குறிப்பு விவரங்கள் வெளியாகா விட்டாலும், இந்த போன் ஆண்ட்ராய்டு 13 OS உடன் வரக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. இது 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய 6000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும். அதேபோல் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய ஐபிஎஸ் HD+ டிஸ்ப்ளேவை ஃபோன் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.  இந்த மொபைலைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

Samsung Galaxy F54 – முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Qualcomm Snapdragon 780G | 8 ஜிபி
  • திரை – 6.6 அங்குலம் (16.76 செமீ)
  • பின் கேமரா – 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
  • செல்ஃபி கேமரா – 16 எம்.பி
  • பேட்டரி – 6000 mAh