![]()
கூகுள் பிக்சல் 8 சீரிஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் தனது புதிய பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தலாம். கூகுள் ஒவ்வொரு ஆண்டும் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் போன்களை கூகுள் ஐ/ஓவில் காட்சிப்படுத்துகிறது. இந்த ஆண்டும், இதையே பின்பற்றி, பிக்சல் 8 சீரிஸ் போன்களை டீஸ் செய்யலாம். இதற்காக Pixel 8 பற்றி தெரிந்து கொள்ள அதுவரை காத்திருக்க வேண்டியதில்லை. துல்லியமான ஸ்மார்ட்போன் கசிவுகளுக்குப் பெயர் பெற்ற டிப்ஸ்டர் OnLeaks Pixel 8 மொபைலின் ரெண்டர் படங்களை வெளியிட்டு இருக்கிறது. அதன் மூலம் இந்த மொபைலின் அம்சங்கள் சில தெரிய வந்துள்ளன.
கூகுள் பிக்சல் 7 5ஜியை விட கூகுள் பிக்சல் 8 போன் வடிவமைப்பில் சில மாற்றங்களைப் பெறும் என கசிந்த டிசைன் ரெண்டர்கள் காட்டுகின்றன. வடிவமைப்பு மாற்றங்கள், சிறிய அளவிலானது என்றாலும், பிக்சல் 7 தொடருடன் ஒப்பிடும்போது மிகவும் கவனிக்கத்தக்கவை. Google Pixel 8 வடிவமைப்பு ரெண்டர்கள், விவரக்குறிப்புகள் மற்றும் இதுவரை அறியப்பட்ட பிற விவரங்களைப் பார்ப்போம்.
![]()
கேமரா
கூகுள் பிக்சல் 8 ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் வரிசையில் நுழைவு-நிலை ஃப்ளாக்ஷிப் போனாக இருக்கும். இந்த போன் மே 2023 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டிற்கு முன்னதாக, டிப்ஸ்டர் ஆன்லீக்ஸ் வரவிருக்கும் பிக்சல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ரெண்டர்களைப் பகிர்ந்துள்ளது. இதன்படி இந்த மொபைல் இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்கும். பிக்சல் 8 ப்ரோவிற்கு பிரத்தியேகமாக இருக்கும் டெலிஃபோட்டோ கேமரா சென்சார் இந்த போனில் இருக்காது. நீட்டிய வைசரில் ஓவல் வடிவ கேமரா தொகுதிக்கு வெளியே LED ஃபிளாஷ் உள்ளது.
டிஸ்ப்ளே
மொபைலின் மூலைகள் நல்ல வட்டம் போன்ற வடிவமைப்பைப் பெற்றுள்ளது. பிக்சல் 7 இன் பாக்ஸி டிசைனுடன் ஒப்பிடும்போது இதுவே பிக்சல் 8க்கு வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. டிசைனில் ஏற்பட்ட இன்னொரு மாற்றமாக பிக்சல் 8 போனின் டிஸ்பிளேவைச் சொல்லலாம். பிக்சல் 7 இல் காணப்படும் 6.3 அங்குலத்தோடு ஒப்பிடும்போது, பிக்சல் 8 ஆனது சுமார் 6.2 அங்குல டிஸ்ப்ளேயேக் கொண்டிருக்கும் என்று OnLeaks எங்களிடம் கூறுகிறது.
அளவு
அதாவது OnLeaks படி, Pixel 8 அதன் முன்னோடியை விட சிறியது. இந்த மொபைல் தோராயமாக 150.5 x 70.8 x 8.9mm அளவைக் கொண்டிருக்கும். நீங்கள் தடிமனான கேமரா வைசரைச் சேர்த்தால், பிக்சல் 8 12 மிமீ தடிமன் இருக்கும்.
இதன் ப்ரேமானது வளைந்துள்ளது. இதன் வலது பக்கத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்களைக் கொண்டுள்ளது. ஃபிரேமில் சில ஆண்டெனா கோடுகளையும் நாம் காணலாம், இது மொபைலானது உலோக சேஸுடன் வரும் என்று பரிந்துரைக்கிறது. கீழ் பக்கத்தில், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோனுக்கான கட்அவுட்களுடன் கூடிய USB Type-C போர்ட் உள்ளது.
கீழே உள்ள வீடியோவில் பிக்சல் 8 இன் 360 டிகிரி டிசைன் ரெண்டரைப் பார்க்கலாம்.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ
கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் டிசைன் ரெண்டர்களும் கசிந்துள்ளன. தற்போதைய ஃபிளாக்ஷிப், பிக்சல் 7 ப்ரோவுடன் ஒப்பிடும்போது மொபைலானது சிறிய திரையைப் பெற்றிருக்கும். பிக்சல் 8 சீரிஸ் வரவிருக்கும் டென்சர் ஜி3 SoC மற்றும் சில மேம்படுத்தப்பட்ட வன்பொருள்களைக் கொண்டிருக்கலாம்.





