ஒருமுறை சார்ஜ் செய்தால் 57 நாட்கள் நீடிக்கும் 6,000mAh பேட்டரியுடன் iTel P40 வெறும் ரூ.7,699க்கு அறிமுகமானது!

Highlights

  • Itel நிறுவனம் பவர் சீரிஸில் சீரிஸின் முதல் மொபைலாக P40 மொபைலை வெளியிட்டு இருக்கிறது
  • நிறுவனத்தின் கூற்றுப்படி, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 57 நாட்களுக்கான ஸ்டேண்ட்-பை பவரைத் தரும்.
  • ரூ.7699 வரும் இந்த மொபைல் 6000mah பேட்டரியோடு, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது

 

இந்தியாவின் பட்ஜெட்விலைப் பிரிவில் மொபைல்களை வெளியிடும் itel நிறுவனம், ‘P’ என்னும் புதிய சீரிஸின் முதல் மொபைலாக P40 என்ற பட்ஜெட்விலை மொபைலை வெளியிட்டு இருக்கிறது. பெயருக்கு ஏற்றபடி இந்த சீரிஸானது மொபைலின் பவரில் அதிக கவனத்தை செலுத்தும் எனத் தெரிகிறது. அதை உறுதி செய்யும் படி இந்த மொபைலில் 6000mAh பேட்டரியை வழங்கி இருக்கிறது. கூடவே ஒருமுறை திரையை மாற்றிக்கொள்ளும் உத்திரவாதத்தையும் வழங்குகிறது. மேலும் இதில் 3ஜிபி வரையிலான விர்சுவல் ரேம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலைப் பிரியர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மொபைலின் பிற அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

இந்த itel P40 மொபைல் 6.6 அங்குல HD+ IPS டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது முன்பக்க கேமராவுக்காக வாட்டர் ட்ராப் ஸ்கிரீன் வடிவமைப்பில்  1612 x 720 பிக்சல் அடர்த்தியில், 120Hz ரிப்ரெஷ்ரேட்டுடன் வெளியாகி இருக்கிறது.

 

கேமரா

இந்த மொபைலின் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், இரண்டாவது கேமராவாக ஒரு QVGA கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே அருகில் ஒரு ப்ளாஷ் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

இந்த itel P40 மொபைலில் SC9863A ஆக்டா-கோர் ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல்,  4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்புத்திறனில் வெளியாகி இருக்கிறது. மேலும் இதில் 7ஜிபி வரையிலாக ரேமை அதிகரித்துக் கொள்ளும் மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கூடவே, இதன் சேமிப்பித்திறனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியே 512GB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

பேட்டரி

இந்த மொபைலின் குறிப்பிடத்தகுந்த அம்சமே இதன் பேட்டரிதான். பட்ஜெட் விலையில் வந்தாலும் இந்த மொபைல் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கூடவே இது 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வெளியாகி உள்ளது.

 

இயங்குதளம்

இத ஐடெல் பி40 மொபைல் ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பில் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த மொபைல் 9.2மிமீ தடிமனையே கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்புக்காக ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் ஐடி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

நிற விருப்பங்கள்

இந்த மொபைல் ஃபோர்ஸ் ப்ளாக், ட்ரீமி ப்ளூ மற்றும் லக்சுரியஸ் கோல்டு என மூன்று வண்ணங்களில் வெளியாகி இருக்கிறது.

 

விலை & உத்திரவாதம்

இந்த ஐடெல் பி40 மொபைலுக்கு ஒரு வருட வாரண்டியும், சர்விஸ் சார்ஜ் இன்றி ஒருமுறை திரையை மாற்றிக் கொள்ளும் உத்திரவாதமும் வழங்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல் itel P40 மொபைலின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்ட் ரூ.7699 என்ற விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.