மோட்டோரோலா மோட்டோ ஜி 13 மொபைலின் இந்திய வெளியீட்டு தேதி வெளியானது

Highlights

  • Motorola Moto G13 மொபைல் மார்ச் 29 அன்று Flipkartல் வெளியாகிறது.
  • இந்த Moto G13 ஆனது Helio G85 SoC மூலம் இயக்கப்படுகிறது
  • லாவெண்டர் ப்ளூ மற்றும் மேட் கோல்  என இரண்டு நிறங்களில் வெளியாகிறது

ஜனவரியில் அறிவிக்கப்பட்ட Motorola Moto G13 மொபைல் ,  மார்ச் 29 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த மொபைலானது இந்திய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான Flipkart  மூலம் வெளி வருகிறத. இதற்கென ஃப்ளிப்கார்ட்டில்  Moto G13 மொபைலுக்கென ஒரு விளம்பரப் பக்கத்தை  அமைத்துள்ளது.

Moto G13 ஆனது Helio G85 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. இந்தியாவில், இது ஒரு 4ஜிபி/128ஜிபி உள்ளமைவு மற்றும் இரண்டு வண்ணங்களில் வரும் – லாவெண்டர் ப்ளூ மற்றும் மேட் கோல்.

 

டிஸ்ப்ளே

Moto G13 ஆனது 6.5 அங்குல HD+ 90Hz IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. IP52 வாட்டர் ரிப்பலெண்ட் டிசைனில் வெளி வருகிறது.

கேமரா

Helio G85-இயங்கும் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50MP கேமராவைக் கொண்டுள்ளது, இதில் 2MP டெப்த் மற்றும் 2MP மேக்ரோ யூனிட்கள் இணைக்கப்பட்டுள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 8MP கேமரா உள்ளது.

 

மெமரி

இந்த Motorola Moto G13 மொபைல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டு இருக்கும். இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு பதிப்பான ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் வருகிறது. அதுவும் எந்த வித ஸ்கின்னும் இன்றி ஸ்டாக் ஆண்ட்ராய்டாகவே வருவதால், ப்ளோட்வேர்கள், இடத்தை அடைக்கும் தேவையில்லாத ஆஃப்கள் எதுவும் இருக்காது.

கனெக்டிவிட்டி

Motorola Moto G13 இன் மற்ற சிறப்பம்சங்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் Dolby Atmos உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவை அடங்கும். இது IP52 என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் சேமிப்பக விரிவாக்கத்திற்கான பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது ஒரு NFC சிப் ஆன்போர்டுடன் வருகிறது, ஆனால் அது சந்தை சார்ந்தது.

 

பேட்டரி

இதில் USB-C போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில்  வெளியாக இருக்கும் Moto G13 மொபைலோடு  10W ஃபாஸ்ட் சார்ஜை ஆதரிக்குமா? அல்லது 20W சார்ஜிங்கை ஆதரிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.