மோட்டோரோலாவின் மோட்டோ எட்ஜ் 40 மற்றும் 40 ப்ரோ விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளன

Highlights

  • எட்ஜ் 40 ப்ரோ மொபைலானது சீனாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மோட்டோ எக்ஸ்40 ஆகும்.
  • மோடோ எட்ஜ் 40 குறைந்த விலை போனாக இருக்கும்
  • மோடோ எட்ஜ் 40 ப்ரோ 165 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய வளைந்த pOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

 

மோட்டோரோலா சமீபத்தில் X40 மொபைலை அதன் புதிய ஃபிளாக்ஷிப் ஃபோனாக அறிமுகப்படுத்தியது. இந்த போன் சீனாவிற்கு வெளியே மோட்டோரோலா எட்ஜ் 40 என அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோவும் தயாராகி வருகிறது. இவற்றைப் பற்றிய வதந்தி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால் தற்போது உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக Edge 40 தொடரின் முழுமையான விவரக்குறிப்புகளை உங்களுக்கு வழங்க இருக்கிறோம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரக்குறிப்புகள் எட்ஜ் 40 மற்றும் எட்ஜ் 40 ப்ரோ ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. எங்களுக்குக் கிடைத்த நம்பகமான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மொபைல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது Moto Edge 40 சீரிஸின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் பற்றிப் பார்ப்போம்.

மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ: விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

மோட்டோரோலாவின் இந்த மோட்டோ எட்ஜ் 40 சீரிஸ் 2023 ஃபிளாக்ஷிப்களில் காணப்படும் டாப்-ஆஃப்-தி-லைன் அம்சங்களைக் கொண்டு இருக்கும். அதிலும் குறிப்பாக எட்ஜ் 40 ப்ரோ மாடல்  அதிக பிரீமியமாக இருக்கும். ப்ரோ மாடல் சீனாவில் இருந்து X40 இன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது. இது டாப்-ஆஃப்-லைன் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC ஐக் கொண்டிருக்கும். இந்த் மொபைல் 12GB LPDDR5X ரேம் மற்றும் 256GB UFS 4.0 சேமிப்பகத்தையும் கொண்டிருக்கும்.

மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ :டிஸ்ப்ளே

போன் 6.67 அங்குல எண்ட்லெஸ்-எட்ஜ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். அதாவது இது ஒரு வளைந்த பேனலாக இருக்கும். HDR10+, Dolby Vision, DCI-P3 வண்ண வரம்புக்கான ஆதரவு, 1300 nits உச்ச பிரகாசம் போன்ற அம்சங்களை முழு HD+ poOLED டிஸ்ப்ளே வழங்கும். 165Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்ப்ளிங் ரேட்டுக்கான ஆதரவு இருக்கும்.

 

மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ : வடிவமைப்பு

பிரேம் அலுமினியத்தால் ஆனது, அதேசமயம் முன் மற்றும் பின்புற பேனல்கள் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் லேயரைக் கொண்டுள்ளன. இந்த போன் தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான iP68 மதிப்பீட்டையும் வழங்குகிறது. இது குவார்ட்ஸ் பிளாக் மற்றும் ஏஞ்சல் வாட்டர்ஃபால் ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகும். எட்ஜ் 40 ப்ரோ சுமார் 199 கிராம் எடையும், 161.16 x 74 x 8.59 மிமீ அளவையும் கொண்டிருக்கும்.

 

மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ : கேமரா & பேட்டரி

இந்த போன் 4600mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும். இந்த பேட்டரியானது 125W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். இதுதவிர, 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவும் இருக்கும். கேமராவைப் பொறுத்தவரை, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் f/1.8 அபச்சர் ஆதரவுடன் 50MP பிரதான கேமரா உள்ளது. கேமரா அமைப்பில் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 12MP போர்ட்ரெய்ட் லென்ஸ் (2x ஆப்டிகல் ஜூம் உடன்) ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, மொபைலில்  60MP முன்பக்க கேமரா உள்ளது. கடைசியாக, எட்ஜ் 40 ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MyUX 5.0 இயங்குதளத்தில் இயக்கும்.

மோட்டோ எட்ஜ் 40 :அம்சங்கள்

புதிய, குறைந்த விலை 5G போனாக எட்ஜ் 40 5G இருக்கும். போனில் அறிவிக்கப்படாத MediaTek Dimensity 8020 SoC இடம்பெறும் என்பதை எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த போன் 8ஜிபி LPDDR4x ரேம் உடன் வெளியிடப்படும் மற்றும் 256GB வரை UFS 3.1 சேமிப்பகத்தை வழங்கும். 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4400mAh பேட்டரியும் இதில் இருக்கும்.

 

மோட்டோ எட்ஜ் 40 : டிஸ்ப்ளே

முன்பக்கத்தில், இந்த மொபைல் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.55 அங்குல முழு HD+ pOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது HDR10+ மற்றும் 1200 nits உச்ச பிரகாசம் போன்ற அம்சங்களுடன் வரும்.

 

மோட்டோ எட்ஜ் 40 : கேமரா

OIS ஆதரவுடன் 50MP f/1.5 பிரதான கேமரா மற்றும் 120-டிகிரி புலத்துடன் கூடிய 13MP அல்ட்ரா-வைட் லென்ஸ் என பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்புடன் இந்த மொபைல் வெளியாகும். செல்ஃபிக்களுக்கு 32MP முன் கேமரா உள்ளது.

 

மோட்டோ எட்ஜ் 40 : வடிவமைப்பு

வீகன் லெதர் மற்றும் PMMA அக்ரிலிக் ஆகிய இரண்டு வெவ்வேறு பொருட்களுடன் இந்த மொபைல் வெளியாகும். வீகன் லெதர் வகை வேரியண்ட் சுமார் 171 கிராம் எடையும் 158.43 x 71.99 x 7.58 மிமீ அளவையும் கொண்டிருக்கும். PMMA வேரியண்ட், 7.49 மிமீ தடிமன் மற்றும் 167 கிராம் எடையுடன் இருக்கும். இரண்டு வகைகளும் IP68 மதிப்பீட்டை வழங்கும். இந்த மொபைல் லூனார் ப்ளூ, நெபுலா கிரீன், எக்லிப்ஸ் பிளாக் மற்றும் மெஜந்தா ஆகிய நான்கு வண்ணங்களில் வெளியிடப்படும்.