2025 ஆம் ஆண்டில் ஆப்பிள் தனது ஐபோன்களுக்கு 120 ஹெர்ட்ஸ் ப்ரோ-மோஷனைக் கொண்டுவருவதாக வதந்தி வெளியானது.

Highlights

  • ஐபோன் பெரிய அப்கிரேடைப் பெற இருக்கிறது
  • ஐபோனில் அதிக  refresh rate கொண்ட டிஸ்ப்ளே மற்றும் LTPO தொழில்நுட்பம் வருவதாக வதந்தி
  • இது பயனரின் திரை அனுபவத்தை மேம்படுத்தும்

 

ஆப்பிளின் ஐபோன் சீரிஸ் அடுத்த சில ஆண்டுகளில் ஒரு பெரிய அப்கிரேடைப் பெற இருக்கிறது. ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஸ்டாண்டர்டு ஐபோன் மாடல்களில் அதிக  refresh rate கொண்ட displays மற்றும் LTPO தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை பயனர் அனுபவத்தை மென்மையாகவும், அதிக ரெஸ்பான்ஸிவாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ப்ரோ-மோஷன் அம்சம்

டிஸ்ப்ளே சப்ளை செயின் ஆலோசகர்களின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஸ் யங்கின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரோமோஷன் தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளில் நிலையான ஐபோன் மாடல்களுக்கு விரிவடையும். இது மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோவை பார்வையிடும் அனுபவத்தை மேம்படுத்தவும், 120Hz வரையிலான புதுப்பிப்பு விகிதத்தை அதிகரிக்க அனுமதிக்கும், அதே நேரத்தில் தேவைப்படும் போது புதுப்பிப்பு விகிதத்தைக் குறைத்தும், டிஸ்ப்ளே அனுபவத்தை மேம்படுத்தும். 2025 ஆம் ஆண்டில் ஸ்டாண்டர்டு ஐபோன்களில் குறைந்த சக்தி கொண்ட LTPO காட்சி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் 10 ஹெர்ட்ஸ் வரை ரேம்ப் செய்ய முடியும், அதேநேரத்தில் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் 1 ஹெர்ட்ஸ் வரை குறைக்க முடியும். இதன் மூலம் மொபைல் லாக் ஆகி இருக்கும் போதுகூட, லாக் ஸ்கிரீனின் கடிகாரம், விட்ஜெட்டுகள், நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் வால்பேப்பரைக் காண்பிக்கும் ‘Alwary on’ டிஸ்ப்ளேவை அனுமதிக்கிறது. “iPhone 17” மற்றும் “iPhone 17 Plus” ஆகியவை ProMotion மற்றும் ‘Alwary on’ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று யங் வழங்கிய ரோட் மேப் தெரிவிக்கிறது.

எதிர்கால திட்டங்கள்

இது தவிர, ஆப்பிள் எதிர்கால ஐபோன்களில் அண்டர் டிஸ்ப்ளே ஃபேஸ் ஐடி மற்றும் கேமராக்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, யங்கின் ரோட் மேப்பின் படி. ஐபோன் 13 ப்ரோ மற்றும் மேக்புக் ப்ரோவிற்கு வரும் ப்ரோமோஷன் உட்பட எதிர்கால ஆப்பிள் தயாரிப்புகள் பற்றிய பல டிஸ்ப்ளே தொடர்பான விவரங்களை ஆய்வாளர் துல்லியமாக கசியவிட்டுள்ளார்.

 

High refresh rate displays மற்றும் LTPO தொழில்நுட்பத்தின் அறிமுகம் ஐபோனின் ஸ்டாண்டர்டு மற்றும் ப்ரோ பதிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த காலத்தில் OLED தொழில்நுட்பம் மற்றும் டைனமிக் ஐலேண்ட் ஆகியவற்றில் செய்ததைப் போலவே, இறுதியில் ஆப்பிள் அதன் அனைத்து ஐபோன் மாடல்களிலும் இந்த தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது .

 

ஸ்டாண்டர்டு மாடல் 2025 வரை LTPO தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் , இந்த நடவடிக்கை ஆப்பிள் ஐபோன் சீரிஸ்க்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். அதிக புதுப்பிப்பு விகிதக் காட்சிகளை அறிமுகப்படுத்துவதற்கு பயனர்கள் மற்றும் போட்டியாளர்களிடமிருந்து நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த நடவடிக்கை எதிர்கால ஐபோன்களுக்கான முக்கிய விற்பனைப் புள்ளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.