

Vivo தனது சமீபத்திய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனான Y100A மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் சிறப்பான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் வருகிறது. இந்த போன் நேர்த்தியான வடிவமைப்பில் மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கிறது. இந்த மொபைல் கண்ணாடி பின்புறத்துடன் வருகிறது. இது பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் வழங்குகிறது. இந்த மொபைல் மெட்டல் பிளாக், ட்விலைட் கோல்ட் மற்றும் பசிபிக் ப்ளூ என மூன்று நிறங்களில் வருகிறது. இந்த மொபைலின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
Vivo Y100A 5G விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
- 6.38 அங்குல AMOLED டிஸ்ப்ளே
- Qualcomm Snapdragon 695 சிப்செட்
- 64எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 4500mAh பேட்டரி
- 44W ஃபாஸ்ட் சார்ஜிங்
டிஸ்ப்ளே
Vivo Y100A ஸ்மார்ட்போன் 2400×1080 (FHD+) அடர்த்தி கொண்ட 6.38 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பகலில் கூட நன்றாக தெரியும் அளவிற்கு அதிக பிரகாசமாக உள்ளது. மல்டி டச், பயனர்களுக்கு மென்மையான மற்றும் பதிலளிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா
Vivo Y100A ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 64MP OIS முதன்மை கேமரா உள்ளது, இதில் 2MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் கேமராவில் நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், போட்டோ மோட், வீடியோ மோட் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
செயலி, ரேம் மற்றும் சேமிப்பு
Vivo Y100A ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 695 சிப்செட் உள்ளது. இந்த போனில் 8ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 128ஜிபி மற்றும் 256ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பு வகைகளில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்
Vivo Y100A ஸ்மார்ட்போனில் 4500 mAh பேட்டரி உள்ளது. இந்த ஃபோன் சார்ஜிங்கிற்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் துணைபுரிகிறது. இந்த போன் அதிவேகமாக சார்ஜ் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
கனெக்டிவிட்டி
விவோவின் இந்த ஃபோனில் வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி மற்றும் ஜிபிஎஸ் ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த போனில் டூயல் சிம் ஸ்டாண்ட் பை (டிஎஸ்டிஎஸ்) பயன்முறை உள்ளது, இதில் ஃபோன் இரண்டு சிம்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும். இது 2G, 3G, 4G FDD-LTE, 4G TDD-LTE, 5G NSA மற்றும் 5G SA நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது.
சென்சார்கள் மற்றும் பிற அம்சங்கள்
Vivo Y100A ஸ்மார்ட்போனில் பல சென்சார்கள் உள்ளன. இந்த போனில் ஆக்சிலரோமீட்டர், அம்பியன்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ், கைரேகை சென்சார் மற்றும் கைரோஸ்கோப் சென்சார் ஆகியவை உள்ளன. இதனுடன், இந்த போன் WAV, MP3, MP4, 3GP, AVI போன்ற ஆடியோ மற்றும் வீடியோ பிளேபேக் அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த போனை சார்ஜ் செய்ய USB Type C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சார்ஜர் மொபைலோடு வருவது சிறப்பு.
Vivo Y100A விலை மற்றும் விற்பனை தேதி
மிட்ரேஞ்சில் வெளியாகி இருக்கும் Vivo Y100 A ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் வருகிறது. Y100A ஸ்மார்ட்போனின் விலை, சலுகை மற்றும் விற்பனை தேதி குறித்து Vivo அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியிடவில்லை என்றாலும். கசிந்த விவரங்களின் அடிப்படையில், விவோவின் இந்த போன் ரூ.26,999 விலையில் விற்பனையாகலாம்.







