
ஆப்பிள் ஐபோனில் இருக்கும் ஐலேண்ட் வசதிபோன்ற ‘Mini capsule’ வசதியோடு வெளியாகி இருக்கிறது Narzo N55. MediaTek Helio G88 சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைல் 12GB வரையிலான டைனமிக் ரேம் வசதியையும் கொண்டுள்ளது. 64MP AI கேமராவை முதன்மை கேமராவாக கொண்டிருக்கும் ரியல்மியின் இந்த Narzo N55 மொபைல் 33W SUPERVOOC சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இந்த போனில் இருக்கும் மற்ற அம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
டிஸ்ப்ளே
இந்த் Realme Narzo N55 மொபைல் 90Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.7 அங்குல FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் மேல் மையத்தில் செல்ஃபி கேமராவுக்காக பஞ்ச்-ஹோல் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி ‘மினி கேப்ஸ்யூல்’ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது மொபைலின் பல்வேறுவிதமான செயல்பாடுகள், நோட்டிஃபிகேஷன்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள பயன்படுகிறது.
கேமரா
இந்த விலைப்பிரிவில் 64MP கேமராவைக் கொண்டிருக்கும் ஒருசில மொபைல்களில் ஒன்றாக மாறியுள்ளது இந்த Narzo N55. இது தவிர பின்பக்கத்தில் 2MP Black & White சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8MP செல்ஃபி கேமரா ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. சென்சார்களைப் பொருத்தவரை GT Master Edition ஃப்ளாக்ஷிப் மொபைல்களில் உபயோகப்படுத்தப்படும் அதே சென்சார்கள் இதில் இருக்கின்றன. எனவே இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தரமானதாக இருக்கும் என நம்பலாம்.
மெமரி
இந்த Narzo N55 மொபைலில் இருக்கும் ரேம் மெமரியை அதிகரிக்க ரியல்மி DRE என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் 6GB ரேம் வசதியோடு இருக்கும் Narzo N55 மொபைலின் ரேம் மெமரியை இன்னும் 6GB வரை அதிகரித்துக்கொள்ள முடியும். அதாவது மொத்தமாக 6GB மொபைலில் 12GB ரேம் பயன்பாட்டைப் பெற முடியும். இது பெரிய கேம்களை விளையாடவும், பல ஆஃப்களை ஒரே நேரத்தில் தடை இன்றி உபயோகிக்கவும் உதவியாய் இருக்கும். இந்த மொபைல் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சேமிப்புத்திறனை இன்னும் அதிகரித்துக் கொள்ள Micro SD ஸ்லாட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதில் Micro SD கார்டை பயன்படுத்தி 1TB வரை சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த மொபைல் 4GB+64GB, 6GB+128GB என இரண்டு விதமான வேரியண்டில் வெளியாகி இருக்கிறது.
சிப்செட் & இயங்குதளம்
Narzo N55 மொபைலில் MediaTek Helio G88 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு 4G சிப்செட் ஆகும். 12nmல் உருவான இந்த ஆக்டாகோர் சிப்செட்டின் அதுது ஸ்கோர் 263739 ஆகும். இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13ன் மேல் ரியல்மி UI 4.0 கொண்டு கட்டமைக்கப்பட்ட இயங்குதளத்தில் இயங்குகிறது.
பேட்டரி & கனெக்டிவிட்டி
இந்த Narzo N55 மொபைலில் 33W SUPERVOOC சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த Narzo N55 மொபைலில் பாதுகாப்புக்கென ஓரத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் எடை 189.5கிராம். இது ப்ரைம் ப்ளாக் மற்றும் ப்ரைம் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது.
Realme Narzo N55 விற்பனை விவரங்கள்
- 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு = ரூ.9,999
- 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு = ரூ.11,999
Realme இரண்டு வகைகளில் Realme Narzo N55 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைலை பிரைம் ப்ளூ மற்றும் பிரைம் பிளாக் வண்ண விருப்பங்களில் வாங்கலாம். Realme Narzo N55 முதல் விற்பனை ஏப்ரல் 18 முதல் தொடங்குகிறது. இந்த போனை Amazon India மூலம் வாங்கலாம். எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் அடிப்படை மாடலுக்கு ரூ.500 மற்றும் டாப் மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி அளிக்கின்றன.
இதனுடன், Realme நிறுவனம் நாளை Realme Narzo N55 சிறப்பு ஃபிளாஷ் விற்பனையை கொண்டு வருகிறது. இந்த விற்பனை ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Amazon மற்றும் Realme இணையதளங்கள் மூலம் ரூ.1000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும்.








