ரூ.10,000 விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜூடன் வரும் மொபைல்கள்

 

Highlights

  • தற்போது ரூ.10,000க்கு கீழ்கூட 128GB சேமிப்புத்திறனுடன் மொபைல்கள் வெளியாகின்றன
  • 128GB என்பது தற்போது குறைந்தபட்ச சேமிப்புத்திறனாக மாறி விட்டது
  • இவற்றில் அனைத்து மொபைல்களும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன

 

மொபைலில் கேமராவுக்குப் பிறகு நாம் அதிகம் கவனிப்பது மொபைலின் சேமிப்புத்திறனைத் தான். பேட்டரியின் அளவைப்போல், தற்போது இண்டர்னல் ஸ்டோரேஜ் என சொல்லப்படும் மொபைலின் சேமிப்புத்திறனும் அதிகரிப்பட்டு வருகிறது. 32GB, 64GB என இருந்த மொபைலின் சேமிப்புத்திறன், இப்போது பெரும்பாலான மொபைல்களில் 128GB ஆக இருக்கிறது. அதாவது ஒரு நல்ல மொபைலில் 128GB என்பது தற்போது குறைந்தபட்ச சேமிப்புத்திறனாக மாறி விட்டது என்று சொல்லலாம். அப்படி 128GB இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்ட, அதே சமயம் ரூ.10,000 விலைக்குள் இருக்கிற மொபைல்களை இங்கு பட்டியலிட்டு இருக்கிறோம். இந்த பட்டியலில் ஆண்ட்ராய்டு 12 மற்றும் 13 இயங்குதளத்தில் வந்த மொபைல்களை மட்டுமே தேர்வு செய்து இருக்கிறோம்.

 

ரூ.10,000க்குள் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜூடன் வரும் மொபைல்கள்.

  • Infinix Hot 30i
  • POCO C55
  • Moto G13
  • Tecno Spark 9
  • Samsung Galaxy M04

 

Infinix Hot 30i

MediaTek Helio G37 சிப்செட், 8ஜிபி ரேம் உடன் வெளியான இந்த மொபைலில் 50MP முதன்மை கேமரா, 5MP செல்ஃபி கேமரா ஆகிய வசதிகள் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

 

POCO C55

MediaTek Helio G85 சிப்செட், 6ஜிபி ரேம் உடன் வெளியான இந்த மொபைலில் 50MP முதன்மை கேமரா, 5MP செல்ஃபி கேமரா ஆகிய வசதிகள் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

 

Moto G13

MediaTek Helio G85 சிப்செட், 4ஜிபி ரேம் மட்டுமே இருக்கும் இந்த மொபைலில் 50MP முதன்மை கேமரா உட்பட மூன்று பின்பக்க கேமராக்களும், 8MP செல்ஃபி கேமராவும் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இதுவும் ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

 

Tecno Spark 9

MediaTek Helio G37 சிப்செட், 6ஜிபி ரேம் உடன் வெளியான இந்த மொபைலில் 13MP முதன்மை கேமரா, 8MP செல்ஃபி கேமரா ஆகிய வசதிகள் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

 

Samsung Galaxy M04

MediaTek Helio P35 சிப்செட், 4ஜிபி ரேம் உடன் வெளியான இந்த மொபைலில் 13MP முதன்மை கேமரா, 5MP செல்ஃபி கேமரா போன்ற வசதிகள் உள்ளன. கூடவே இந்த மொபைல் 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

இந்த மொபைல்கள் தவிர Tecno Spark 10, Tecno Spark 10C, Blu G72 Max, Lava Blaze 2 4G போன்ற மொபைல்கள் விரைவில் வர இருக்கின்றன. இதுமட்டுமின்றி Vivo Y53A, Tecno Spark 9 Pro, Infinix Hot 13 Play போன்ற ஆகிய மொபைல்கள் வெளியாக இருப்பதாக வதந்திகள் வெளியாகி உள்ளன. இந்த மொபைல்கள் ரூ.10,000 விலைப்பிரிவுக்குள் வெளிவரும் என்றும், அவை 128ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.