Google pixel 7A, Pixel fold மொபைல் வெளியாவதற்கு முன்பே வெளியீட்டு தேதி மற்றும் விலை கசிந்தது.

Highlights

  • கசிவின்படி, Google pixel fold-ஐ மே 10 முதல் ப்ரீ ஆர்டர் செய்து  ஜூன் 27 முதல் பெறலாம்
  • Pixel 7a மே 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Pixel 7a விலை $499 (தோராயமாக ரூ. 41,000 ) இருக்கும்.

 

மே 10 ஆம் தேதி I/O 2023 டெவலப்பர் மாநாட்டை Google திட்டமிட்டுள்ளது. அதில் வழக்கம்போல் Android 14 OS ஐ வெளியிடும். கூகுள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரே கட்டத்தில் மலிவு விலையில் Pixel 7a மற்றும் மிகவும் பிரபலமான Pixel Fold ஆகியவற்றை அப்போது அறிமுகப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இதுபற்றி பல வதந்தி தகவல்கள ஆன்லைனில் வெளியாகி வருகின்றன.

FrontPageTech இன் Jon Prosser, Pixel 7a மற்றும் Pixel Fold எப்போது முன்கூட்டிய ஆர்டர்கள் மற்றும் வாங்குவதற்கு கிடைக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் . தனித்தனியாக, தெரிந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை Pixel 7a இன் விலை விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

Google Pixel 7a மற்றும் Pixel Fold – எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி

Prosser இன் கூற்றுப்படி, Google Pixel Fold மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். மேலும் Google Store இலிருந்து ப்ரீ ஆடரும் செய்ய முடியும். மே 10 ஆம் தேதி மற்றும் மே 30 ஆம் தேதி விற்பனை பார்ட்னர்கள் மற்றும் கடைகள் மூலம் தொடங்கும். போல்டபிள் போன் ஜூன் 27 முதல் விற்பனைக்கு வரும்.

 

மே 10 ஆம் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே Pixel 7a கிடைக்கும் என்றும், Charcoal, Snow, Sea, and Coral ஆகிய நிறங்களில் (Google Store மட்டும்)வெளிவரும் என்றும் ஜான் கூறுகிறார். Pixel 7a வெளியீட்டிற்குப் பிறகு Google Pixel 6a ஐ நிறுத்தாது என்றும் அறிக்கை கூறுகிறது.

Google Pixel 7a (எதிர்பார்க்கப்படும்) விலை

Pixel 7a விலையைப் பொறுத்தவரை, 9to5Google அறிக்கையானது ஃபோனின் விலை $499 (தோராயமாக ரூ. 41,000) என்று கூறுகிறது. இது Pixel 6a இல் இருந்து $50 அதிகமாகும். ஹார்டுவேர்களில் செய்துள்ல அப்டேட்டை கருத்தில் கொள்ளும் போது இந்த விலை நியாயமானதாகவேத் தெரிகிறது.

 

Pixel 7a (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்

கூகுள் பிக்சல் 7a ஆனது 6.1 அங்குல FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், சமச்சீர் பெசல்கள் மற்றும் மேல் மையத்தில் அமைந்துள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS 3.1 சேமிப்பகத்துடன் டென்சர் ஜி2 சிப்செட்டைக் கொண்டுஇருக்கும்.

Pixel 7a ஆனது 64MP Sony IMX787 சென்சார் மற்றும் 13MP செகண்டரி சென்சார் உடன் வரும். செல்ஃபிக்களுக்காக இந்த போனின் முன்பக்கத்தில் 10.8MP ஸ்னாப்பரை வழங்கலாம். மொபைலின் மீதமுள்ள விவரங்கள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், விரைவில் மேலும் பல விவரங்கள் தெரியவரும்.

பிக்சல் ஃபோல்ட் விவரக்குறிப்புகள், அம்சங்கள் (வதந்தி)

கூகுள் பிக்சல் ஃபோல்ட் 7.57 அங்குல மடிக்கக்கூடிய மெயின் டிஸ்ப்ளேவுடன் வரும். வெளிப்புறத் டிஸ்ப்ளே  5.78 அங்குல பேனலாக இருக்கும். இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்துடன் வெளியாகலாம். டென்சர் ஜி2 சிப்செட்டைக் கொண்டு இருக்கும். ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இந்த மொபைல் வெளியாகும்.

கூகுள் பிக்சல் ஃபோல்ட் 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

 

Google Pixel 7A முக்கிய விவரக்குறிப்புகள்

  • சிப்செட் – Google Tensor G2
  • ரேம் – 8 ஜிபி
  • டிஸ்ப்ளே – 6.1 அங்குலம் (15.49 செமீ)
  • பின் கேமரா – 64 எம்.பி + 12 எம்.பி
  • செல்ஃபி கேமரா – 8 எம்.பி
  • பேட்டரி – 4410 mAh