
பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட மொபைலில் சிறிது சிறிதாக வசதிகள் சேர்க்கப்பட்டன. தற்போது பேசுவது பெருமளவு குறைந்த வசதிகளுக்காக மொபைல் வாங்குவதும், பயன்படுத்துவதும் அதிகமாகிவிட்டது. பெரும்பாலான வசதிகள் ஒரு மொபைல் வழியாக கிடைப்பது ஒருவகையில் நல்லது என்றாலும், நம்மில் பலர் இன்று நம் மொபைலுக்கு அடிமையாக இருக்கிறோம் என்றுகூட சொல்லலாம். இதை தவிர்க்க நிபுணர்களும், மருத்துவர்களும் கூறும் அறிவுரை மொபைல் நேரத்தைக் குறைப்பது. அதற்கென சில எந்த வசதிகளும் இல்லாத ‘பேசிக் மொபைல்’ எனப்படும் பழைய வகை மொபைல்களை மீண்டும் உபயோகிக்கத் துவங்கி உள்ளனர். இன்னும் சில வீட்டில் இருக்கும் வயதானவர்கள் பேசுவதற்கு மட்டுமே உபயோகிப்பதற்காகவும் இந்த பேசிக் மொபைலை வாங்குகின்றனர். ரூ 10,000 கொடுத்து வாங்க ஆண்ட்ராய்டு மொபைல் வாங்குமளவு வசதி இல்லாதவர்கள் சொந்தங்களோடும், நட்புகளோடும் தொடர்பில் இருக்க இந்த வகை மொபைல்களே உதவுகின்றன. இந்த வகை மொபைல்களில் பிரபலமானது நோக்கியா நிறுவனம். அப்படி ரூ.2000க்கு கீழே கிடைக்கும் ‘பேசிக்’ மொபைல்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
இவற்றில் ‘டச்’ ஸ்கிரீன், இருக்காது, டயல் செய்யவும், எழுத்துக்களை டைப் செய்யவும் பட்டன்களே வழங்கப்பட்டு இருக்கும். சிறிய அளவிலான திரையையே கொண்டு இருக்கும். இவை ஆண்ட்ராய்டு, IOS இல்லாத பிற இயங்குதளத்தில் செயல்படும். இதனால் குறைந்த அளவு RAM மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். மொபைலில் நாம் எதையேனும் சேமிக்க நினைத்தால் ஒரு Micro SD வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கென இதில் தனியாக ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கும். மேலும் இவற்றை சார்ஜ் செய்ய Micro-USB போர்ட் வழங்கப்பட்டிருக்கும்.
ரூ. 2000க்கு கீழ் கிடைக்கும் நோக்கியா போன்கள்
- Nokia 105 Plus
- Nokia 110 4G
- Nokia 105 2022
- Nokia 105 2017
- Nokia 110 2022
- Nokia 105 2019 Dual SIM
- Nokia 130 Dual SIM 2017
- Nokia 105 2019
- Nokia 105 plus Dual SIM
- Nokia 110 2019
- Nokia 105 2017 Dual SIM
Nokia 105 Plus
இதில் 166 பிக்சல் அடர்த்தியுள்ள 1.77 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த மொபைலில் 1000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 32GB வரை இதன் மெமரியை விரிவாக்கம் செய்துகொள்ள முடியும். இதில் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1379க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/nokia-105-plus-price-in-india?utm_source=SERP
Nokia 110 4G
இதில் 111 பிக்சல் அடர்த்தியுள்ள 1.8 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த மொபைலில் 1020mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 32GB வரை இதன் மெமரியை விரிவாக்கம் செய்துகொள்ள முடியும். டூயல் சிம் மொபைலான இதில் 4ஜி, ஒரு VGA கேமரா மற்றும் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1759க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/nokia-110-4g-price-in-india?utm_source=SERP
Nokia 105 2022
இதில் 116 பிக்சல் அடர்த்தியுள்ள 1.77 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த மொபைலில் 800mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதில் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1299க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/nokia-105-2022-price-in-india?utm_source=SERP
Nokia 105 2017
இதில் 114 பிக்சல் அடர்த்தியுள்ள 1.8 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த மொபைலில் 800mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதில் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1428க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு:https://www.91mobiles.com/nokia-105-2017-price-in-india?utm_source=SERP
Nokia 110 2022
இதில் 116 பிக்சல் அடர்த்தியுள்ள 1.77 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த மொபைலில் 1000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 32GB வரை இதன் மெமரியை விரிவாக்கம் செய்துகொள்ள முடியும். டூயல் சிம் மொபைலான இதில் 4ஜி, ஒரு 0.3MP கேமரா மற்றும் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1649க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு:https://www.91mobiles.com/nokia-110-2022-price-in-india?utm_source=SERP
Nokia 105 2019 Dual SIM
இதில் 116 பிக்சல் அடர்த்தியுள்ள 1.77 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. டூயல் சிம் மொபைலான இதில் 800mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதில் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1294க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/nokia-105-2019-dual-sim-price-in-india?utm_source=SERP
Nokia 130 Dual SIM 2017
இதில் 114 பிக்சல் அடர்த்தியுள்ள 1.8 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த மொபைலில் 1020mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 32GB வரை இதன் மெமரியை விரிவாக்கம் செய்துகொள்ள முடியும். டூயல் சிம் மொபைலான இதில் 0.3MP கேமரா மற்றும் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1679க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/nokia-130-dual-sim-2017-price-in-india?utm_source=SERP
Nokia 105 2019
இதில் 116 பிக்சல் அடர்த்தியுள்ள 1.77 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் 800mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதில் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1249க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/nokia-105-2019-price-in-india?utm_source=SERP
Nokia 105 Plus Dual SIM
இதில் 116 பிக்சல் அடர்த்தியுள்ள 1.77 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் 1000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 32GB வரை இதன் மெமரியை விரிவாக்கம் செய்துகொள்ள முடியும். இதில் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1533க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/nokia-105-plus-dual-sim-price-in-india?utm_source=SERP
Nokia 110 2019
இதில் 116 பிக்சல் அடர்த்தியுள்ள 1.77 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த மொபைலில் 800mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 32GB வரை இதன் மெமரியை விரிவாக்கம் செய்துகொள்ள முடியும். டூயல் சிம் மொபைலான இதில் 0.3MP கேமரா மற்றும் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1699க்கு கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/nokia-110-2019-price-in-india?utm_source=SERP
Nokia 105 Dual SIM 2017

இதில் 114 பிக்சல் அடர்த்தியுள்ள 1.8 அங்குல TFT டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் 800mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் மொபைலான இதில் FM ரேடியோ உள்ளது. இது ரூ.1200க்கு கிடைக்கிறது.
















