இந்தியாவில் POCO F5 மொபைலின் அறிமுகத் தேதி வெளியிடப்பட்டது

Highlights

  • POCO F5 சீரிஸின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக  வெளியானது
  • இந்த சீரிஸில் POCO F5 Pro மற்றும் POCO F5 மாடல்கள் இடம்பெறும்.
  • இந்தியாவில் POCO F5 மட்டுமே அறிமுகமாகிறது, Pro வேரியண்ட் ஆகாது.

 

POCO நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் சீரிஸில் POCO F5 Pro மற்றும் POCO F5 ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெறும் . Xiaomi-ஆதரவு நிறுவனம் இந்த வெளியீட்டை டீஸ் செய்து வருகிறது. அதில் மொபைல்கள் வெளியாகும் தேதியையும் உறுதி செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ Gen2 சிப்செட்டுடன் POCO F5 அறிமுகப்படுத்தப்படும் என்பதை  நிறுவனம் உறுதிப்படுத்திய சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது .

 

POCO F5 சீரிஸ் இந்தியாவில் வெளியிடப்பட்ட தேதி

POCO F5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 9 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும். உலகளாவிய வெளியீடும் அதே நாளில் நடைபெறும். ஆனால் அதில் POCO F5 மாடலோடு POCO F5 Pro மாடலும் வெளியாகும். POCO F5 மொபைலுக்கான் Flipkart microsite தகவலின் படி, POCO F5 மட்டுமே இந்தியாவில் வெளியாகும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய வெளியீட்டு நிகழ்வைப் பொறுத்தவரை, இரண்டு போன்களும் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் யோகேஷ் ப்ராரின் கூற்றுப்படி,  இந்தியாவில் POCO F5 ஆனது பேசிக்  மாடல் ரூ. 28,000 அல்லது ரூ.29,000 இல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர மொபைல்களின் விவரக்குறிப்புகளையும்  அவர் டிப்ஸ் செய்துள்ளார் .

Flipkart டீஸர் POCO F5 மொபைலை வெள்ளை நிறத்தில் காட்டுகிறது. மேலும் இது ஒரு மறுபெயரிடப்பட்ட Redmi Note 12 Turbo என்று வடிவமைப்பு என்பதும் தெரிவிக்கிறது. கூடுதலாக, POCO F5 Pro ஆனது Redmi K60 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம். போனின் மற்ற விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, POCO F5 ஆனது Snapdragon 7+ Gen2 SoC உடன் வரும் என்றும், 8GB + 256GB மற்றும் 12GB + 256GB ஆகிய இரண்டு வகைகளில் வெளியிடப்படும் என்றும் POCO உறுதிப்படுத்தியுள்ளது. POCO F5 Pro மற்றும் POCO F5 பற்றி இதுவரை நாம் அறிந்தவற்றை இப்போது பார்க்கலாம்.

 

POCO F5 Pro விவரக்குறிப்புகள்

டிஸ்ப்ளே

POCO F5 ஸ்மார்ட்போன் 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் பஞ்ச்-ஹோல் செல்ஃபி கேமராவுடன் 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

 

சிப்செட்

POCO F5 Pro, இந்த சீரிஸின் ஹை-எண்ட் மாடலாக இருக்கும். இது Qualcomm Snapdragon 8 Gen1 சிப்செட் மற்றும் 12GB ரேம் ஆகியவற்றைக் கொண்டு இருக்கும்.

 

பேட்டரி

இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,160mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும்

 

கேமரா

POCO F5 Pro ஆனது OIS உடன் 64MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு இது 16MP முன் கேமராவைக் கொண்டிருக்கலாம்.

 

கனெக்டிவிட்டி

POCO F5 Pro ஒரு நானோ சிம் ஸ்லாட், 5G மற்றும் NFC உடன் வரும் என்றும் அறிக்கை கூறுகிறது. கூடவே இது கீழே USB Type-C போர்ட்டையும் கொண்டிருக்கும்.

 

மென்பொருள்

POCO F5 Pro மற்றும் POCO F5 இரண்டும் Android 13-அடிப்படையிலான MIUI 14ஐ இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

POCO F5 விவரக்குறிப்புகள்

 

டிஸ்ப்ளே

Pro வேரியண்ட்டைப் போலவே, POCO F5 மொபைலில் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. POCO F5 மொபைலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் வழங்கப்படும்.

 

கேமரா

POCO F5 மொபைலும் மூன்று கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பேட்டரி

POCO F5 மொபைலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கூடிய 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கும்.