108MP கேமராவுடன் வரும் புதிய Infinix Note 30 5G போன், விவரக்குறிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி கசிந்தது

Highlights

  • இந்த போன் மே 30 அன்று வெளியிடப்படலாம்.
  • இது டைமன்சிட்டி 6080 சிப்செட்டில் செயல்படும்
  • விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பு இருக்கும்.

 

இன்ஃபினிக்ஸ் பிராண்ட் அதன் ‘நோட்’ சீரிஸின் புதிய ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருகிறது.  இது Infinix Note 30 5G என்ற பெயரில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இந்த மொபைல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை என்றாலும், டிப்ஸ்டர் பராஸ் குக்லானி, இன்ஃபினிக்ஸ் நோட் 30 5ஜியின் பல விவரக்குறிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே பகிர்ந்துள்ளார். அந்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Infinix note 30 5g வெளியீட்டு விவரங்கள்

Infinix Note 30 5G தொடர்பான கசிவில், நிறுவனம் வரும் மே 30 ஆம் தேதி ஆன்லைன் நிகழ்வை ஏற்பாடு செய்யும் என்றும் இந்த தளத்திலிருந்து Infinix Note 30 5G போன் தொழில்நுட்ப தளத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் ஒரு போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நிறுவனம் மூலம் அறிவிப்பு வெளியானவுடன் அதை உங்களுக்கு அப்டேட் செய்கிறோம்

 

Infinix note 30 5g (கசிந்த)விவரக்குறிப்புகள்

 

  • 6.78″ FHD+ திரை
  • 120Hz புதுப்பிப்பு வீதம்

 

Infinix Note 30 5G போனை எடுத்துக்கொண்டால், இது 6.78 இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திரையில் FullHD + ரெசல்யூஷன் இருக்கும். இது LCD பேனலில் உருவாக்கப்படும். மறுபுறம், கசிவின் படி இந்த மொபைல் போனில் 120Hz புதுப்பிப்பு வீதம் இருக்கும்.

 

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6080
  • 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்புத்திறன்

 

கசிவின் படி, Infinix Note 30 5G ஐ MediaTek இன் Dimensity 6080 சிப்செட்டில் அறிமுகப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் வெளியாகும். அதேபோல் இதில் 256 ஜிபி உள் சேமிப்பு இருக்கும். இந்த போன் ஒன்றுக்கும் மேற்பட்ட மெமரி வேரியன்ட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 108MP பின்புற கேமரா
  • 16MP முன் கேமரா

புகைப்படம் எடுப்பதற்காக, இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனில் டிரிபிள் ரியர் கேமரா இருக்கும் விஷயம் லீக்கில் தெரியவந்துள்ளது. இந்த போன் 108 மெகாபிக்சல் கேமரா சென்சார் சப்போர்ட் செய்யும் என்றும், இதன் பின் பேனலில் 2 மெகாபிக்சல்கள் மற்றும் AI லென்ஸ்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்கிற்கு இந்த போனில் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொடுக்கப்படும் விஷயமும் லீக்கில் கூறப்பட்டுள்ளது.

 

  • 5,000mAh பேட்டரி
  • 33W ஃபாஸ்ட் சார்ஜிங்

Infinix Note 30 5G இல், 5,000 mAh பேட்டரி பவர் பேக்கப்பிற்காக கொடுக்கப்படலாம்.  கூடவே இதனை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் காணலாம். கசிவில் பகிரப்பட்ட புகைப்படம் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்ட கைரேகை சென்சார் அதன் வலது பேனலில் இருக்கும் என்பதைக் காட்டுகிறது.