[Exclusive] தெர்மோமீட்டர் அம்சத்தோடு வரும் Google Pixel 8 Proவின் வீடியோ கசிந்தது.

Highlights

  • Google Pixel 8 Pro மற்றும் Pixel 8 இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
  • அறிமுகத்திற்கு முன்னதாக, Pixel 8 Proவின் வடிவமைப்பைக் காட்டும் பிரத்யேக படத்தைப் பெற்றுள்ளோம்.
  • Pixel 8 Pro உடல் வெப்பநிலையை அளவிடும் தெர்மோமீட்டருடன் வருகிறது.

 

பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகியவற்றைக் கொண்ட கூகுளின் முதன்மையான பிக்சல் ஸ்மார்ட்போன் 8 சீரிஸ் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 8 சீரிஸின் கசிவுத்தகவல்கள் மற்றும் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதன்மூலம் கிடைக்கப்பெற்ற விவரங்கள் குறைவாகவே உள்ளன. மேலும் இந்த போன்கள் எப்படி இருக்கும் என்பதும் தெரியவில்லை. இந்நிலையில், Tipster Kuba Wojciechowski பிரத்தியேகமாக பிக்சல் 8 ப்ரோ மொபைலின் வீடியோவை 91மொபைல்ஸ் உடன் பகிர்ந்துள்ளார். இது மொபைலின் முழு வடிவமைப்பையும் வெளிப்படுத்துகிறது மற்றும் மொபைல் எப்படி தெர்மோமீட்டராகவும் செயல்படுகிறது என்பதையும் விளக்குகிறது.

 

கூகுள் பிக்சல் 8 ப்ரோ வடிவமைப்பு

 

Pixel 8 Pro ஆனது Pixel 7 Pro போன்று பஞ்ச்-ஹோல் முன் கேமராவுடன் காணப்படுகிறது. பின்புறத்தில், மூன்று கேமராக்கள் உள்ளன. ஆனால் இந்த முறை கூகிள், மாத்திரை வடிவ தொகுதிக்குள் மூன்று சென்சார்களையும் இணைத்துள்ளது. பிக்சல் 7 ப்ரோவில் இரண்டு கேமராக்கள் ஒன்றாகவும், பின்புறம் தனித்தனியாகவும் உள்ளன. கேமரா மாட்யூலைக் கொண்ட உலோக சட்டமும் பிக்சல் 7 ப்ரோவைப் போலவே தெரிகிறது. முழு வீடியோவையும் இங்கே பார்க்கலாம்.

 

கூகுள் பிக்சல் 8 ப்ரோ தெர்மோமீட்டர் சென்சார்

 

LED ப்ளாஷ்க்குக் கீழே கூடுதலாக ஒரு புதிய சென்சார் இருக்கிறது. ஆனால், இது மொபைலுக்கானது இல்லை. இது ஒரு பிரத்யேக அகச்சிவப்பு தெர்மோமீட்டர் சென்சார் ஆகும். இது உங்கள் உடலின் வெப்பநிலையை அளவிட பயன்படுகிறது. இந்த சென்சார் பெரும்பாலான contactless வெப்பமானிகள் போன்று வேலை செய்கிறது. வீடியோவில், பிக்சல் 8 ப்ரோவில் உள்ள உள்ளமைக்கப்பட்ட தெர்மோமீட்டர் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான தெளிவான விளக்கத்தைக் காணலாம்.

உங்களின் வெப்பநிலையை அளவிட, LEDக்கு அருகில் இருக்கும் இந்த வெள்ளை நிற சென்சாரை நெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் நெற்றியில் அல்லது தோலில் வேறு எந்த கருவியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். அதன் பிறகு, பிக்சல் 8 ப்ரோவின் சென்சாரை முடிந்தவரை உங்கள் நெற்றிக்கு அருகில் கொண்டு வர வேண்டும், ஆனால் அது உங்கள் தோலைத் தொடக்கூடாது. அதன்பின் Start பட்டனைத் தட்டி ஐந்து வினாடிகளுக்கு பக்கவாட்டாக மொபைலை நகர்த்த வேண்டும். உங்கள் வெப்பநிலை அளவிடப்பட்டதும், தொலைபேசி அதிர்வுறும் (வைப்ரேட் ஆகும்) இப்போது நீங்கள் உங்கள் வெப்பநிலையை மொபைலில் பார்க்கலாம்.

 

உள்ளமைக்கப்பட்ட தெர்மோமீட்டர் பிக்சல் 8 ப்ரோவில் மட்டுமே கிடைக்கும். ஏனெனில் அதற்கு தனி சென்சார் தேவைப்படுகிறது. உடல் வெப்பநிலையை அளவிடுவதோடு, பொருட்களின் வெப்பநிலையையும் பிக்சல் 8 ப்ரோ அளவிடும். சேகரிக்கப்பட்ட தரவு மொபைலில் சேமிக்கப்படும் மேலும் அது Android Private Compute Core மூலம் கையாளப்படும். இந்த அம்சம் ஏற்கனவே கூகுளர்களால் சோதிக்கப்பட்டு வருகிறது.

 

Google Pixel 8 Pro வெளியீடு மற்றும் விவரக்குறிப்புகள்

 

நாம் பாரம்பரியத்தின்படி சென்றால், கூகுள் பிக்சல் 8 சீரிஸின் வெளியீடு அக்டோபரில் நடக்கும். இதுவரை கசிந்துள்ளவற்றின் அடிப்படையில், பிக்சல் 8 ப்ரோ சாம்சங்கின் 50MP ISOCELL GN2 கேமரா சென்சார் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1/1.12-இன்ச் அளவில் உள்ளது, இது சாம்சங்கின் மிகப்பெரிய கேமரா சென்சார் ஆகும். ஒரு பெரிய கேமரா சென்சார் புகைப்படங்களை சிறந்த படம் மற்றும் அதிக தெளிவுத்திறனைக் கொண்டிருக்கும். கூகுள் பிக்சல் 8 ப்ரோ 6.52-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது “ஜூமா” என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு புதிய செயலியை பேக் செய்யலாம் மற்றும் இது பெரும்பாலும் டென்சர் ஜி3 ஆகும்.

 

Google Pixel 8 Pro முக்கிய விவரக்குறிப்புகள்

 

  • சிப்செட் – Google Tensor G2
  • ரேம் – 12GB
  • டிஸ்ப்ளே – 6.7 அங்குலம் (17.02 செமீ)
  • பின் கேமரா – 64MP + 48 MP + 12 MP
  • செல்ஃபி கேமரா – 16 எம்.பி
  • பேட்டரி – 5100 mAh