


மோட்டோரோலா Razr 40 சீரிஸ் விலை
Motorola Razr 40 Ultra இரண்டு சேமிப்பகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடலின் விலை 5699 யுவான். அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 67,000 ரூபாய். 12ஜிபி ரேம் + 512ஜிபி மாடல் 6399 யுவான் அதாவது சுமார் ரூ.75,000.

நிறுவனம் அதன் Motorola Razr 40 மொபைலை 3 சேமிப்பு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 8ஜிபி ரேம் + 128ஜிபி விருப்பத்தின் விலை 3999 யுவான் அதாவது சுமார் 46,000 ரூபாய். போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு 4299 யுவான் அதாவது சுமார் ரூ.50,000 மற்றும் 12 ஜிபி ரேம் + 256ஜிபி மாடல் 4699 யுவான் அதாவது சுமார் ரூ.55,000.
Motorola Razr 40 இன் விவரக்குறிப்புகள்
- டிஸ்ப்ளே: Motorola Razr 40 மடிக்கக்கூடிய தொலைபேசி 6.9-இன்ச் HD + OLED பேனலைக் கொண்டுள்ளது. இதில் 2640 x 1080 பிக்சல் அடர்த்தி, 144Hz புதுப்பிப்பு வீதம், 413 PPI பிக்சல் அடர்த்தி, 10-Bit நிறம், HDR 10+ ஆதரவு ஆகியவை கிடைக்கின்றன. டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க கொரில்லா கிளாஸ் 7 நிறுவப்பட்டுள்ளது.
- இரண்டாம் டிஸ்ப்ளே: Motorola Razr 40 இன் பின் பேனலில் 1.47-இன்ச் சிறிய கவர் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 194 x 368 பிக்சல் அடர்த்தி கொண்ட OLED பேனல் ஆகும்.
- சிப்செட்: Razr 40 மொபைலில், நிறுவனம் Snapdragon 7 Gen 1 சிப்செட்டை வழங்கியுள்ளது.
- சேமிப்பகம்: மொபைலில் 12GB ரேம் + 256GB வரை சேமிப்புத்திறன் கிடைக்கிறது.
- பேட்டரி: பேட்டரியைப் பொறுத்தவரை, இந்த மொபைல் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4200mAh பேட்டரியோடு வெளியாகி இருக்கிறது.
- கேமரா: இந்த போன் OIS ஆதரவுடன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, செல்ஃபி எடுக்க 32 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.
- OS: இந்த மொபைல் Android 13 இல் இயங்குகிறது.
- கனெக்டிவிட்டி: Dual-SIM 5G, Wi-Fi 6, NFC, Bluetooth V5.3 போன்ற அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
- மற்ற அம்சங்கள்: Razr 40 ஆனது IP52 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக நீர் மற்றும் தூசி பாதுகாக்கப்படுகிறது.

Motorola Razr 40 Ultra இன் சாத்தியமான விவரக்குறிப்புகள்
- டிஸ்ப்ளே: மோட்டோரோலா Razr 40 ultra மடிக்கக்கூடிய ஃபோன் 6.9-இன்ச் pOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் 2400 x 1080 பிக்சல் அடர்த்தி மற்றும் 165Hz புதுப்பிப்பு விகிதம் உள்ளது. அது போல் இதன் இரண்டாவது டிஸ்ப்ளே 3.6 இன்ச் ஆகும். இதுவும், 1066 x 1056 பிக்சல் அடர்த்தி 165Hz புதுப்பிப்பு வீதத்துடன் வெளியாகி இருக்கிறது
- சிப்செட்: இந்த மொபைலில் சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
- மெமரி: மெமரியைப் பொறுத்தவரை, இந்த போன் 12GB LPDDR5 RAM + 512GB சேமிப்பகத்துடன் வருகிறது.
- கேமரா: LED ஃபிளாஷ் கொண்ட இரட்டை பின்புற கேமரா Razr 40 Ultra இல் இருக்கிறது. இதில் f/1.5 அப்பசர் கொண்ட 12MP முதன்மை லென்ஸ் மற்றும் f /2.2 அப்பசர் கொண்ட 13MP அல்ட்ரா வைட் லென்ஸ் உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக f/2.4 அப்பசர் கொண்ட 32MP கேமரா லென்ஸ் உள்ளது.
- பேட்டரி: இந்த மோட்டோரோலா ஃபோனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 3,800mAh பேட்டரி உள்ளது. இது வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
- OS: இந்த Motorola Razr 40 Ultra மொபைல் Android 13 இல் இயங்குகிறது.
- கனெக்டிவிட்டி: Dual-SIM 5G, Wi-Fi 6, NFC, Bluetooth V5.3 போன்ற அம்சங்கள் இந்த மொபைலில் கிடைக்கின்றன.
- மற்ற அம்சங்கள்: Razr 40 Ultra ஆனது IP52 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் உதவியுடன் நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாப்பு உள்ளது.





