
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். ஜவான் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் தற்போது ‘லியோ’ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இயக்குனர் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தற்போது அல்லு அர்ஜுனிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டதாக செய்திகள் காட்டுத்தீ போல பரவிய நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை வெளியிட்டுள்ளார் திரிஷா.
திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த படத்தில் குந்தவையாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார். லியோ படத்தின் பூஜையின் போது இருவரும் இருந்த க்யூட்டான புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படத்தில், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்ற திரிஷா மூன்று நாட்களிலேயே சென்னை திரும்பினார். படப்பிடிப்புக்கு போன வேகத்திலேயே திரிஷா மீண்டும் சென்னை திரும்பியதால், திரிஷா லியோ படத்திலிருந்து விலகி விட்டதாகவும், லோகேஷூக்கும் திரிஷாவுக்கும் பிரச்சனை என்றும் பலவிதமான வதந்திகள் பரவின.
ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ
இந்நிலையில் நடிகை திரிஷா லியோ படத்தின் ஷூட்டிங் நடக்கும் காஷ்மீரில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் காஷ்மீர் ஆப்பிள் போல சும்மா ஜில்லுனு இருக்கிறார் திரிஷா. இந்த போட்டோ வெளியானதும் அவரின் தீவிர ரசிகர்கள் திரிஷா லியோ படத்திலிருந்து விலகி விட்டார், லோகேஷுக்கும் திரிஷாவுக்கும் சண்டை என, என்னா உருட்டு உருட்டுனாங்க, இன்னைக்கு எல்லாரும் கப்சிப் என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
பான் இந்திய திரைப்படம்
லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற அறிவித்துள்ளதால், லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உடனடியாக நீக்கப்படும்
நேற்று லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்கானதால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால்,படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வீடியோவா, புகைப்படமோ வெளியானால், அது உடனடியாக நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய ஏற்பாட்டையும் படக்குழு செய்துள்ளது.







