AI 64MP Portrait கேமராவோடு வெளியானது Oppo f21s pro 5G

ஒப்போ இன்று Oppo f21s pro மற்றும் Oppo f21s pro 5G என இரண்டு மொபைல்களை வெளியிட்டு இருக்கிறது. இதில் ஒன்று 5ஜி மொபைலாகவும், மற்றொன்று 4ஜி மொபைலாகவும் உள்ளது. இவை இரண்டும் 64MP AI Portrait கேமராவோடு வெளியாகி இருக்கின்றன.
Oppo f21s pro 5G

கேமரா

Oppo f21s pro 5G மொபைலின் சிறப்பு அம்சமாக கேமராவைச் சொல்லலாம். இதன் பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் கொண்ட AI Portrait கேமரா இருக்கிறது. Bokeh அம்சத்திற்கு 2மெகா பிக்சல் லென்சும், 4 செமீ அளவுக்கு அருகில் சென்று எடுக்கும் ஒரு மேக்ரோ கேமராவும் இருக்கிறது. மேலும் இதன் முன்பக்கத்தில் 16 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வழியே தரமான செல்ஃபி புகைப்படங்களை எடுக்க ‘Selfie HDR’ என்ற அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடவே ப்ளாஷ் வசதியும் இருக்கிறது. வீடியோவைப் பொருத்தவரை, இருபக்க கேமரா மூலமாகவும் 1080p@30 fps வரையிலான வீடியோவை எடுக்க முடியும்.

அம்சங்கள்

இந்த போன் 6.43 அங்குல FHD+ (2400 x 1080) AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. 60Hz refresh rate, 180Hz Touch sampling rate-ஐ கொண்டிருக்கும் இந்த மொபைலின் ஸ்கிரீன் ரேஷியோ 90.80%. கூடவே 409PPI அடர்த்தியோடு அதிகபடசமாக 600nits வரையிலான Brightness உடன் வெளியாகி உள்ளது. இந்த Oppo f21s pro 5G மொபைல் 5ஜி ஆதரவுடன் வருகிறது. இதில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 695 என்றா ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது Adreno 619@840MHz உடன் வருகிறது.

இதில் பிங்கர் ப்ரிண்ட் மற்றும் facial recognition வசதி உள்ளது. இந்த Oppo f21s pro 5G மொபைல் ColorOS 12.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் கேமராக்களைச் சுற்றி இரண்டு ஆர்பிட் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை அழைப்பு வந்தாலோ, அல்லது மேசேஜ்கள் போன்ற நோட்டிபிகேஷன்கள் வந்தாலோ ஒளிரும் படி வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.

ரேம் & சேமிப்புத்திறன்

இந்த Oppo f21s pro 5G மொபைல் 8GB LPDDR4X RAM, 128GB சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இந்த சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். இது தவிர OTG ஆதரவும் இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.1, வைஃபை 5, டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. NFC ஆதரவு இல்லை.

பேட்டரி

181கிராம் எடையுடன் வெளியாகி இருக்கும் இந்த Oppo f21s pro 5G மொபைலில் 45100mAh பேட்டரி 33W fast charge வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த Oppo f21s pro 5G மொபைல் டான்லைட் கோல்டு (Dawnlight Gold), ஸ்டார்லைட் ப்ளாக் (Starlight Black) ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புத் திறனுடன் வெளியாகி இருக்கும் இந்த Oppo f21s pro 5G மொபைலின் விலை ரூ25,999 ஆகும்.