Home List ரூ.25,000 விலையில் கிடைக்கும் A/Cகள்

ரூ.25,000 விலையில் கிடைக்கும் A/Cகள்

வீட்டுக்குள்ளே இருக்கோமா.. இல்ல, குக்கருக்குள்ளே இருக்கோமானு தெரியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்குது. ஃபேனுக்கு அடியில உட்கார்ந்திருக்கோமா இல்ல, ஷவருக்கு அடியில இருக்கோமானு தெரியல.. அந்த அளவுக்கு உடம்பெல்லாம் ஊத்தெடுத்து தண்ணி ஓடுது. பகல்தான் இப்படினா.. இரவுல இன்னும் அதிகம். பகல்ல் அடிச்ச வெக்கை வீட்டை விட்டே போக மாட்டேங்குது. நாம படுத்து இருக்கிறது சாதாரண பெட்டா, வாட்டர் பெட்டானு நமக்கே சந்தேகம் வர்ற அளவுக்கு வேர்வை அருவியா ஓடி குளமா மாறி இருக்குது. இதுக்கு தீர்வு தான் என்ன?

A/C வாங்கி மாட்டலாம். ஆனா, ஏசினு போனாலா  40 ஆயிரம், 50 ஆயிரம் செலவாகுமேனு நினைக்கிறீங்களா? ஆமா, லேட்டஸ்ட் வசதிகள், ஹை-எண்ட் ப்ராண்ட்களோட ஏசி வாங்குனா அந்த அளவுக்கு செலவு ஆகும்தான். ஆனா, ஒரு உண்மையைச் சொல்றோம். ஏசி வச்சிருக்கிற பெரும்பாலான ஆட்கள் அப்படி வர்ற எந்த ஒரு எக்ஸ்ட்ரா வசதியையும் உபயோகப்படுத்துறதே இல்ல. டிவி மாதிரி ஸ்விட்ச் ஆன் – ஸ்விட்ச் ஆஃப் மட்டுதான் பண்ணுறாங்க. அது போதுமானதும் கூட. அப்படிப்பார்த்தா ஒரு நல்ல A/Cஐ ரூ. 25,000 இருந்தாலே வாங்கிறலாம். அப்படி நல்ல ரேட்டிங்ஸோட கிடைக்கிற ஏசிகளை இப்போ பார்க்கலாம்.

 

Voltas 125 DZA 1 Ton 5 Star Window AC

வோல்டாஸ் நிறுவனத்தோட இந்த ஏசி 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இருக்கு. இதனால் கரண்ட் பில் குறைவாத்தான் வரும். இது ஒரு விண்டோ ஏசி. ஒரு டன் அளவுல வர்ற இந்த ஏசியோட மெயின் யூனிட் காப்பரால உருவாக்கப்பட்டு இருக்கு.

விலை = ரூ. 26,990

மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/voltas-125-dza-1-ton-5-star-window-ac-price-in-india-125809

 

Blue Star WFA309GN 0.8 Ton 3 Star Window AC

இதுவும் ஒரு விண்டோ ஏசி தான், ப்ளூ ஸ்டார் நிறுவனத்தோட இந்த A/C 3 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கி இருக்கு. 0.8 டன் அளவுல வர்ற இந்த ஏசியோடுமெயின் யூனிட் மற்றும் அவுட்டோர் யூனிட் ரெண்டுமே காப்பரால உருவாக்கப்பட்டு இருக்கு.

 

விலை = ரூ. 24,890

மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/blue-star-wfa309gn-0-8-ton-3-star-window-ac-price-in-india-155748

 

Hitachi RAW312HEDO 1 Ton 3 Star Window AC

ஏசிக்கு பேர் போன பிராண்டான ஹிட்டாசியோட விண்டோ ஏசி மாடல் தான் இது. 3 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கி இருக்கும் இந்த ஏசி 1 டன் அளவுல வருது. இந்த ஏசியோட மெயின் யூனிட் காப்பரால உருவாக்கப்பட்டு இருக்கு.

 

விலை = ரூ. 21,990

மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/hitachi-raw312hedo-1-ton-3-star-window-ac-price-in-india-144191

 

Lloyd GLW12C2YWSEW 1 Ton 2 Star Window AC

லாய்டு நிறுவனத்தோட இந்த விண்டோ ஏசி 1 டன் அளவுல வருது. 2 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இருக்கு. இந்த ஏசியோடுமெயின் யூனிட் மற்றும் அவுட்டோர் யூனிட் ரெண்டுமே காப்பரால உருவாக்கப்பட்டு இருக்கு.

விலை = ரூ. 23,790

மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/lloyd-glw12c2ywsew-1-ton-2-star-window-ac-price-in-india-155792

 

MarQ FKAC083SIAEXT 0.8 Ton 3 Star Inverter Split AC

மார்க்யூ என்பது ஃப்ளிப்கார்ட்டோட ஒரு ப்ராண்ட் ஆகும். அந்த ப்ராண்ட்ல வந்திருக்கிற இது ஒரு ஸ்ப்ளிட் ஏசியும் கூட. இது 0.8 டன் அளவுல வருது. 3 ஸ்டார் ரெட்டிங்ஸ் வாங்கி இருக்கிற இந்த ஏசியோட மெயின் யூனிட் காப்பரால உருவாக்கப்பட்டு இருக்கு.

விலை = ரூ. 21,490

மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/marq-fkac083siaext-0-8-ton-3-star-inverter-split-ac-price-in-india-138875

 

MarQ FKAC103SIAINC 1.5 Ton 3 Star Inverter Split AC

மேலே பார்த்த அதே  மார்க்யூ ப்ராண்டோடு இன்னோரு மாடல்தான் இந்த ஏசி. இது 1டன் அளவுல வருது. அதே மாதிரி இதுவும் 3 ஸ்டார் ரேட்டிங்கோட வருது. இதோட மெயின் யூனிட்டும் காப்பர்ல உருவாக்கப்பட்டு இருக்கு.

விலை = ரூ. 23,490

மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/marq-fkac103siainc-1-5-ton-3-star-inverter-split-ac-price-in-india-133201

 

Croma CRLAIN0123T0251 1 Ton 3 Star Inverter Split AC

‘க்ரோமா’வைக் கடையா மட்டும் தான் பார்த்து இருக்கீங்கன்னா.. அதுல இருந்து வீட்டு உபயோகப் பொருட்களும் வருதுங்கிறதைத் தெரிஞ்சுக்கங்க. அப்படி க்ரோமாவோட சொந்த தயாரிப்பா வந்திருக்கிற இந்த ஏசி 1 டன் அளவுல 3 ஸ்டார் ரேட்டிங்கோட வெளியாகி இருக்கு. இதுல ஹூமிடிட்டி கண்ட்ரோல் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனா, இந்த ஏசியோடுமெயின் யூனிட் மற்றும் அவுட்டோர் யூனிட் ரெண்டுமே காப்பரால உருவாக்கப்பட்டு இருக்கு.

விலை = ரூ. 22,994

மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/croma-crlain0123t0251-1-ton-3-star-inverter-split-ac-price-in-india-149642