184 நாடுகளுக்கு இலவச அழைப்பு மற்றும் டேட்டா வசதி – ஏர்டெல் அதிரடி!

  • பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்காக வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏர்டெல் பயனர்கள் 184 நாடுகளில் இலவச இணையம் மற்றும் அழைப்பு வசதியைப் பெறுவார்கள்

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்காக வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு என இரண்டு வகை பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. திட்டத்தின் ஆரம்ப விலை 649 ரூபாய். இந்த திட்டத்தில், ஏர்டெல் பயனர்கள் 184 நாடுகளில் இலவச இணையம் மற்றும் அழைப்பு வசதியைப் பெறுவார்கள். இதுவரை டெலிகாம் நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு ரீசார்ஜ் திட்டங்களையும் பேக்குகளையும் கொண்டிருந்தன. அதை ஏர்டெல் மாற்றி அமைத்திருக்கிறது.

உண்மையில், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டிற்கும் சர்வதேச பயணங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த ஓராண்டில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களை மனதில் வைத்து ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் உலகின் எந்த நாட்டிலும் 24X7 கால் சென்டர் ஆதரவைப் பெறுவார்கள்.

வேர்ல்ட் பாஸ் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.

ஏர்டெல்லின் புதிய வேர்ல்ட் பாஸ் ரீசார்ஜின் ஆரம்ப விலை ரூ.649. இந்த ரூ.649 திட்டத்தில் ஒரு நாள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். இந்தத் திட்டத்தில், லோக்கல் மற்றும் இந்தியாவில் காலிங்கிற்கு 100 நிமிடங்கள் மற்றும் 500 எம்பி அதிவேக டேட்டா கிடைக்கிறது.

ரூ.2,999 திட்டம்

இதில் 10 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் 5 ஜிபி டேட்டா மற்றும் காலிங்க்கு ஒரு நாளைக்கு 100 நிமிடங்கள்.

ரூ 3,999 திட்டம்

இந்த திட்டத்தில், ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டம் 100 நிமிட வொய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.5,999 திட்டம்

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள். இதன் மூலம் 900 நிமிடங்கள் (15 மணிநேரம்) வாய்ஸ் காலிங் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ரூ.14,999 திட்டம்

இந்த திட்டம் ஒரு வருட வேலிடிட்டியைக் கொண்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் 3000 நிமிட குரல் அழைப்பு மற்றும் 15 ஜிபி டேட்டா கிடைக்கும்.

வேர்ல்ட் பாஸ் ப்ரீ-பெய்டு திட்டங்கள்.

ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் ப்ரீ-பெய்டு திட்டங்களின் வடிவத்தில் நான்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.649 திட்டம்

இந்த திட்டத்தில் மலிவான திட்டம் ரூ.649 ஆகும். இந்த திட்டத்தில், 500 எம்பி டேட்டா மற்றும் 100 நிமிட அழைப்பு வசதி ஒரு நாள் வேலிடிட்டியாகும்.

ரூ.899 திட்டம்

ரூ.899 திட்டமானது 10 நாட்கள் வேலிடிட்டி, 100 நிமிட காலிங் மற்றும் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.2,998 திட்டம்

ரூ.2,998 வேர்ல்டு பாஸ் ப்ரீ-பெய்டு திட்டமானது 200 நிமிட அழைப்பு மற்றும் 5ஜிபி டேட்டாவை 30 நாட்கள் வேலிடிட்டியாகும்.

ரூ.2,997 திட்டம்

ரூ.2,997 திட்டத்தில் ஒரு வருட வேலிடிட்டி மற்றும் 100 நிமிட வொய்ஸ் காலிங் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
அடிக்கடி வெளிநாடு சென்று வருபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.