24 நாட்கள் வேலிடிட்டியோடு ரூ.155க்கு புதிய திட்டத்தை அறிவித்த ஏர்டெல்

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel)  நிறுவனங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியைச் சமாளிக்க, இரு நிறுவனங்களும் தொடர்ந்து பல புதிய திட்டங்களை, வெவ்வேறு பலன்கள் உடன் வழங்குகின்றன. அந்த வரிசையில், ஜியோ நிறுவனத்திற்குக் கடுமையான போட்டியை உருவாக்கும் புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம், இப்போது வெறும் ரூ.155 விலையில் வழங்கியுள்ளது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க.

 

ஏர்டெல்லின் பழைய திட்டம்

பார்தி ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஏர்டெல் அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்கள், டேட்டா பேக்குகள், டாப்-அப்கள் போன்ற பல்வேறு திட்டங்களை, பல்வேறு விலைப் பிரிவுகளின் கீழ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில் புதிய கட்டண திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் நிறுவனம் இதற்கு முன் வழங்கி வந்த ரூ.99 நுழைவு நிலை ரீசார்ஜ் திட்டத்தைத் தனது பட்டியலில் இருந்து நிரந்தரமாக நிறுவனம் நீக்கிவிட்டது.

 

ஏர்டெல்லின் புதிய திட்டம்

இதற்குப் பதிலாக, ஏர்டெல் இப்போது அதன் பயனர்களுக்கு ஏர்டெல் ரூ.155 என்ற நுழைவு நிலை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், இனி ஏர்டெல் இடமிருந்து கிடைக்கும் நுழைவு நிலை திட்டமாக இந்த ரூ.155 திட்டம் மாறிவிட்டது. இந்த ரூ.155 திட்டமானது, அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் நிமிடங்களை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. கூடுதலாக, பயனர்களுக்கு Wynk Music மற்றும் Free Hellotunes போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது. இத்திட்டத்துடன் கிடைக்கும் 300 எஸ்எம்எஸ்-க்கு பிறகு, வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் எஸ்எம்எஸ்-க்கு ரூ. 1 என்ற விதத்திலும், எஸ்டிடி எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1.50 எந்த விதத்திலும் வசூலிக்கப்படுவார்கள். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 SMS அனுப்பும் வரம்பு உள்ளது. அதிவேக டேட்டாவிற்கு பிறகு டேட்டா கட்டணம் 50p/MB என வசூலிக்கப்படும். ஏர்டெல் பயனர்கள் எந்தவொரு செயலில் உள்ள அடிப்படைத் திட்டமும் இல்லாமல் ரீசார்ஜ் செய்கிறார்கள், அல்லது சிறப்புப் பலனாக, சில வாடிக்கையாளர்கள் ரூ.155 திட்டத்துடன் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறவும் வாய்ப்புள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.

 

5ஜி சேவைக்கு பயன்படுமா?

ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் அனுபவத்தைப் பெற இந்தத் திட்டத்துடன் இணைந்த டேட்டா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தலாம். ஏர்டெல் ரூ.155 திட்டமானது 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்றாலும், 5ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏர்டெல் 5ஜி பிளஸ் 92 நகரங்களில் நேரலையில் உள்ளது. மிசோரமின் ஐஸ்வாலில் சமீபத்திய 5ஜி பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பார்தி ஏர்டெல், மார்ச் 2023-க்குள் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகளை 300 நகரங்களுக்கு விரிவுபடுத்தவும், மார்ச் 2024-க்குள் அனைத்து நகர்ப்புறங்களை அடையவும் திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் 5ஜி பிளஸ் அனைத்து 5ஜி இணக்கமான ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் iOS சாதனங்களிலும் வேலை செய்கிறது என்கிறது குறிப்பிடத்தக்கது.