Home News 56 நாட்கள் வேலிடிட்டியை 70 நாட்களுக்கு உயர்த்தியது Airtel!

56 நாட்கள் வேலிடிட்டியை 70 நாட்களுக்கு உயர்த்தியது Airtel!

ஏர்டெல் சமீபத்தில் பயனர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதனையொட்டி, தற்போது அந்நிறுவனம் பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது நிறுவனம் ரூ.395 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியை 14 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பதை உங்களுக்கு நினைவிருக்கலாம்.  இது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வந்தது. ஆனால், இப்போது இந்த திட்டம் 70 நாட்களுக்கு இயங்குகிறது. மேலும் திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் பற்றிய முழுமையான தகவலை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.395 திட்ட விவரங்கள்

டேட்டாவை விட அழைப்பு மற்றும் வேலிடிட்டியை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது.

600 SMS முடிந்த பிறகு, ஏர்டெல் SMS-க்கு ரூ.1 மற்றும் STD SMS-க்கு ரூ.1.5 வசூலிக்கும். டேட்டாவிற்கு, ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்கள் மூலம் பயனர்கள் ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டத்தில் வரம்பற்ற 5G டேட்டா சலுகை இல்லை. மறுபுறம், ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ.395 ப்ரீபெய்ட் திட்டத்தை 5ஜி சலுகையுடன் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.395 திட்டம்

இந்த திட்டத்தின் விலை 395 ரூபாய். இதனுடன், மொத்தம் 6 ஜிபி இணைய டேட்டாவும் 84 நாட்களுக்கு திட்டத்தில் கிடைக்கும். டேட்டாவைத் தவிர, இலவச அழைப்பு மற்றும் தினசரி மொத்தம் 100 எஸ்எம்எஸ்கள் இந்தத் திட்டத்தில் கிடைக்கும்.