
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதன் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய 5ஜி நெட்வொர்க் சேவை இதுவரை குறிப்பிட்ட சில 5G ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது OnePlus மற்றும் Oppo நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து 5ஜி போன்களில் எடுக்கும் என்று ஏர்டெல் கூறியுள்ளது.
ஒன்ப்ளஸ் தற்போது பல 5G போன்களை வெளியிட்டு இருக்கிறது. OnePlus இன் சமீபத்திய மாடலான OnePlus 10 Pro சிறிது காலத்திற்கு முன்பு 5G-க்கு ஆதரவைப் பெற்றது.
இது ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 5G இரண்டையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏர்டெல்லின் 5ஜியை ஆதரிக்காத ஒன்பிளஸின் சில போன்கள் 5ஜி அப்டேட்டைப் பெறாமல் இருந்தது.
OnePlus மட்டுமல்ல, Oppo வின் 5ஜி ஸ்மார்ட்போன் கூட ஏர்டெல் 5ஜி சேவையை இயக்காமல் இருந்து வந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளது. காரணம், இப்போது Oppo மற்றும் OnePlus நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனகளின் பெரும்பாலான மாடல்கள் ஏர்டெல் 5ஜி சேவைக்கான அப்டேட்டை பெற்றுவிட்டன என்று கூறப்படுகிறது.
இதை அதிகாரப்பூர்வமாக OnePlus அறிவிக்கவில்லை, ஆனால் இதை பார்தி ஏர்டெல் இணையதளத்தில் நம்மால் காண முடிகிறது. சில நாட்களுக்கு முன், 5G-யை ஆதரிக்கும் மற்றும் ஆதரிக்காத OnePlus மற்றும் Oppo இன் சாதனங்களைப் பற்றி. பட்டியலை வெளியிட்டிருந்தோம்.
ஆனால் இப்போது, இந்தியாவில் உள்ள அனைத்து OnePlus மற்றும் Oppo 5G போன்களும் 5Gயை ஆதரிக்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பிராண்டில் எந்தெந்த சாதனங்கள் 5ஜி ஆதரவைப் பெற்றுள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் 5ஜியை ஆதரிக்கும் ஒன்பிளஸ் 5ஜி போன்கள்:
ஏர்டெல்லின் 5G சேவைக்கான சமீபத்திய அப்டேட்டை பெற்ற சாதனங்களில் OnePlus 8, OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus Nord 2 மற்றும் OnePlus 9R போன்றவை அடங்கும்.
அதேபோல், ஏர்டெல்லின் 5G NSA நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் அனைத்து OnePlus ஸ்மார்ட்போன்களும் இப்போது 5ஜி சேவையுடன் செயல்படுகின்றன.
இதில் OnePlus 9 Pro, OnePlus Nord CE OnePlus Nord, OnePlus 9, OnePlus Nord CE Lite 2, OnePlus 10R, OnePlus 2, Nord, OnePlus 10 Pro 5G, OnePlus Nord 2T, OnePlus 10T, OnePlus 9RT, OnePlus 8, OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus Nord 2 மற்றும் OnePlus 9R போன்ற மாடல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் 5ஜியை ஆதரிக்கும் ஒப்போ 5ஜி போன்கள்
அனைத்து Oppo 5ஜி போன்களும் இப்போது பார்தி ஏர்டெல்லின் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கின்றன.
ஏர்டெல் 5G சேவைக்கான ஆதரவைப் பெற்ற சமீபத்திய Oppo சாதனங்கள் – Oppo F19 Pro Plus, Oppo Reno5G Pro, Oppo Reno 6, Oppo Reno 6 Pro, Oppo A53s, Oppo A74, Oppo Reno 7 Pro 5G, Oppo F21 Pro 5G, Oppo Reno 7, Oppo Reno 8, Oppo Reno 8 Pro, Oppo K10 5G மற்றும் Oppo F21s Pro 5G மாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Oppo அதன் சாதனங்களுக்கான அப்டேட்களை விரைவாக வெளியிடுகிறது. இந்த ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் உங்களிடம் இருந்தால் ஏர்டெல் 5ஜியை நீங்கள் பயன்படுத்தத் துவங்கலாம்.