
Amazfit GTS 4 Mini ஸ்மார்ட்வாட்ச் ஜூலை 16-ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மிட்நைட் பிளாக், ஃபிளமிங்கோ பிங்க், மிண்ட் ப்ளூ மற்றும் மூன்லைட் ஒயிட் ஆகிய 4 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அமேஸ்பிட் நிறுவனம் அதன் GTS 4 mini ஸ்மார்ட்வாட்சை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அல்ட்ரா ஸ்லிம் மற்றும் லைட் டிசைனுடன் வெளியாகி இருக்கிறது.
15 நாட்கள் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் செப் இயங்குதளம் இடம்பெற்று உள்ளது. Amazfit GTS 4 Mini ஸ்மார்ட்வாட்ச், மிட்நைட் பிளாக் (midnight black), ஃபிளமிங்கோ பிங்க் (Flemingo pink), மிண்ட் ப்ளூ (Mint blue) மற்றும் மூன்லைட் ஒயிட் (moonlight white) ஆகிய 4 நிறங்களில் வெளியாகி இருக்கிறது. 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களும், Always on போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்று உள்ளன.
இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஜூலை 16-ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் மற்றும் அமேஸ்பிட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ.7 ஆயிரத்து 999 ஆகும். ஆனால் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.6 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை 1.65 அங்குல HD AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி 270 mAh பேட்டரியும் இதில் இருக்கிறது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி இதில் உள்ள பேட்டரி சேவர் மோட் (battery saver mode) அம்சத்தை பயன்படுத்தினால் 45 நாட்கள் வரை சார்ஜ் இருக்கும் என கூறப்படுகிறது.