பண்டிகை காலம் என்பதால் அமேசான் தளத்தில் தொடர்ந்து பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் போன்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது அவ்வாறு அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சில போன்களின் பட்டியலை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
Oppo A54 (Crystal Black, 4GB RAM, 64GB Storage) with No Cost EMI & Additional Exchange Offers
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலைச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51அங்குல HD Plus டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் மாடல். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்ஃபி கேமராவும் இருக்கிறது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது.
Samsung Galaxy A13 4GB RAM, 64GB Storage with No Cost EMI/Additional Exchange Offers, (SM-A135FLBGINS)
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 24 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.13,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் 6.6 அங்குல Full HDயுடன் கூடிய் இன்பினிட்டி வி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 2408 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனில் 50எம்பி ரியர் கேமரா இருக்கிறது. எனவே தௌவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
Vivo Y21G (Diamond Glow, 4GB RAM, 64GB ROM) with No Cost EMI/Additional Exchange Offers
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y21G ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 25 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த விவோ ஸ்மார்ட்போன் 6.51அங்குல Full HD Plus டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. விவோ Y21G ஸ்மார்ட்போன் 13எம்பி மெயின் கேமரா +2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. கூடவே 8எம்பி செல்ஃபி கேமரா, 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.
Redmi Note 10S (Deep Sea Blue, 6GB RAM, 64GB Storage) -Super Amoled Display | 64 MP Quad Camera | Alexa Built in
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில 18 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது 13,999-விலையில் வாங்க முடியும். இந்த போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இந்த போன் 6.43 அங்குல் AMOLED டிஸ்பிளே வசதியோடு வருகிறது. மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட், ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே 13எம்பி செல்ஃபி கேமராவும் இருக்கிறது.

OPPO A15s (Rainbow Silver, 4GB RAM, 64GB Storage) With No Cost EMI/Additional Exchange Offers
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 29 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.9,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 6.52 அங்குல வாட்டர் டிராப் டிஸ்ப்ளே HD Plus, 720×1520பிக்சல்கள் ரெசல்யூஷனுடன் வருகிறது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4230 mAh பேட்டரி வசதியுடன் வருகிறது. 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் 8எம்பி செல்ஃபி கேமரா, 4230 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ A15s ஸ்மார்ட்போன்.









