Home List அதிரடி விலைகுறைப்பில் அமேசானில் கிடைக்கும் 5ஜி போன்கள்

அதிரடி விலைகுறைப்பில் அமேசானில் கிடைக்கும் 5ஜி போன்கள்

அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் 5ஜி போன்களுக்கு நம்ப முடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விலைகுறைப்பு பெற்ற சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24,990-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளவிலைகுறைப்பின் மூலம் இந்த கேலக்ஸி எம்33 5ஜி போனை ரூ.14,999-விலையில் கிடைக்கிறது.

அம்சங்கள்

கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6 அங்குல Full HD LCD டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 6000 எம்ஏச் பேட்டரி, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 பிராசஸர், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே, செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 8எம்பி கேமராவும் இருக்கிறது.



ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இதன் அசல் விலை ரூ.24,999-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலை குறைப்பின் மூலம் இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ போனை ரூ.16,460-விலையில் வாங்க முடியும்.

அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இதோடு செல்ஃபி மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கு 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் 6.56 அங்குல டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆக்டோ-கோர் ஹீலியோ ஜி35 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.


ஒப்போ ஏ74 5ஜி

அமேசானில் முன்பு ரூ.20,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.14,990-க்கு கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்

6.49 அங்குல FHD plus டிஸ்பிளே, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ74 5ஜி. இதோடு, 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோசென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களும், செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 8எம்பி கேமராவும் இருக்கிறது.

ரெட்மி நோட் 11டி 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது அமேசான் தளத்தில் 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.20,999 ஆகும். ஆனால் அமேசான் அறிவித்துள்ள சலுகையின் மூலம்இந்த ரெட்மி போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

அம்சங்கள்

6.6 அங்குல Full HD LCD டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி

அமேசானில் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,999-விலையில் வாங்க முடியும்.

அம்சங்கள்

6.4 அங்குல் Full HD பிளஸ் Super AMOLED டிஸ்பிளே, ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 920 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதில் 48எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16எம்பி வழங்கப்பட்டுள்ளது.