HBO Max Original தொடர்கள் இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது.


இந்த ஜூலை மாதத்திலிருந்து தொடர்ச்சியாக HBO MAX-யின் தொடர்களையும், படங்களையும் பிரத்யேகமாக வாங்கி அமேசான் பிரைமில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

எம்மி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட ‘The Flight Attendant’, DC சூப்பர் ஹீரோ தொடரான ‘Peacemaker’, ‘Sex and the City’ தொடரின் புதிய பாகமான ‘And Just Like That…’, DC சூப்பர் ஹீரோக்களை மையப்படுத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘Doom Patrol’, கல்லூரிக்குள் நடக்கும் கலாட்டாக்களைச் சொல்லும் ‘The Sex Lives of College Girl’s, சயின்ஸ் பிக்ஷன் தொடரான ‘Raised by Wolves’ எனப் பல தொடர்களை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இவற்றுள் ‘Peacemaker’ 2021-ம் ஆண்டு வெளியான ‘The Suicide Squad’ படத்தின் ஸ்பின் ஆஃபாக (spin-off) வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜான் சீனா நடிக்கிறார். அதேபோல, ‘Never have I ever’ தொடரின் கிரியேட்டரான மைண்டி காலிங்தான் ‘The Sex Lives of College Girls’ தொடரையும் கவனித்துக்கொள்கிறார்.

இதுதவிர, HBO MAX-யின் பல தொடர்களும், படங்களும் அமேசான் பிரைமில் விரைவில் வெளியாக இருக்கின்றன.