வெளியானது புதிய ஆப்பிள் வாட்ச் & ஏர்பாட் ப்ரோ

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ’Apple Event 2022’ நேற்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்குத் தொடங்கியது.

புதிய தயாரிப்புகள்

இந்த நிகழ்வில் ஆப்பிளின் 3 புதிய வாட்சுகள், புதிய ஏர்பாட் மற்றும் 4 விதமான ஐபோன்கள் வெளியிடப்பட்டன. ஆப்பிள் வாட்ச்கள் மற்றும் ஏர்பாட் ப்ரோ பற்றி இப்போது பார்க்கலாம்.

Apple watch

ஆப்பிள் வாட்ச் 8

இதில் இரண்டு வகையான வாட்சுகள் வெளியிடப்பட்டன.
ஆப்பிள் வாட்ச் 8 GPS = $399
ஆப்பிள் வாட்ச் 8 GPS + Celluler = $499

இதனையடுத்து ஆப்பிள் வாட்ச் SE வெளியிடப்பட்டது

ஆப்பிள் வாட்ச் SE

இதில் இரண்டு வகையான வாட்சுகள் வெளியிடப்பட்டன.
ஆப்பிள் வாட்ச் 8 SE GPS = $249
ஆப்பிள் வாட்ச் 8 SE GPS + Celluler = $299

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

அதன்பின் Apple watch Ultra வெளியிடப்பட்டது. இது பலவகையான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு GPS (frequency) சிக்னலுக்கு பதில் இரண்டு GPS Frequencyகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இரண்டு மடங்கு துல்லியத்துடன் இந்த வாட்ச் இயங்குகிறது. மேலும் இதனை இரவிலும் நன்றாக பயன்படுத்தும் வண்ணம் சிகப்பில் ஒளிரும் ‘Night mode’ வசதியும் இருக்கிறது. இதனை ஆழ்கடல் நீச்சலின் போதுகூட பயன்படுத்தும் வண்ணம் இரண்டு மடங்கு ‘Water Resistance’ வசதியுடன் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும் இதன் வெளிச்சத்தன்மை 2000nits வரை இருக்கிறது. இதனால் உச்சி வெயிலாக இருந்தாலும் சரி, ‘கும்’ இருட்டாக இருந்தாலும் சரி.. எந்த காலத்திற்கும் ஏற்றதாக இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா இருக்கும். இதனை இப்போதே ப்ரீஆர்டர் செய்யும் வசதியும் இருக்கிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் இதனை 23ம் தேதி பெற முடியும்.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா = $799.

Apple Airpod

அடுத்ததாக ஆப்பிள் நிறுவனம் Apple Airpod Pro-வை வெளியிட்டது.
இதில் H2 chip பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது தடையில்லாமல் வேலை செய்ய பெரிதும் உதவுகிறது. இந்த ஏர்பாட் ப்ரோ முந்தைய மாடலைவிட பல வகைகளில் மேம்படுத்தப் பட்டு இருக்கிறது.

Personal Spacial Audio

இந்த ஏர்பாட் ப்ரோவில் புதிதாக Personal Spatial Audio என்ற சிறப்பு அம்சம் புகுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த ஏர்பாடை பயன்படுத்துபவரின் காது அமைப்புக்கு ஏற்றவாறு ஒலியை சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும். இதனால் சிறப்பான ஒலியமைப்பைப் உணர முடியும்.

அதே போல் சென்ற மாடல் ஏர்பாடை விட இரண்டு மடங்கு சிறந்த ‘Active Noice Cancelation’ஐ அனுபவிக்க முடியும். இது நாம் இருக்கும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி தானாகவே மாற்றிக்கொள்கிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் ‘Touch control’ மூலம் இதனை இயக்க முடியும். இதன் பேட்டரி கேஸை எங்கேயேனும் மறந்து வைத்துவிட்டால் அதை ஐபோன் மூலம் ட்ராக் செய்து கண்டுபிடிக்கும் வசதியும் இதில் இருக்கிறது. இதற்கென கேஸில் ஒலியை எழுப்பும் வசதியும் இருக்கிறது.

இதன் பேட்டரி 6 மணி நேரம் வரையிலான ‘listening time’ஐ கொண்டு இருக்கிறது. அதுவே கேஸில் வைத்து பயன்படுத்தும் போது 30 மணி நேரம் வரை இதை பயன்படுத்த முடியும். இதனை ஆப்பிள் வாட்ச் சார்ஜரைக் கொண்டே சார்ஜ் செய்ய முடியும் என்பது கூடுதல் வசதி. இதனை இப்போது ஆர்டர் செய்தால் செப்டம்பர் 23ம் தேதி பெற்றுக் கொள்ள முடியும்.
Airpod Pro விலை = $249