
நவராத்திரியை முன்னிட்டு ஆப்பிள் ஐபோன் 14 மொபைலுக்கு தற்போது பிளிப்கார்ட்டில் 9% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிக்குப் பிறகு ரூ.71,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, வாங்குபவர்கள் HDFC வங்கியின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 4000 ரூபாய் உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர, Flipkart உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. அதாவது அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் 14 ரூ.34,000 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.37,999க்கு கிடைக்கிறது.
ட்ரெண்டிங்கில் ஐபோன் 14
ஆப்பிள் ஐபோன் 14 இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. காரணம், கடந்த இரண்டு மாதங்களாக இந்த போனுக்கு பிளிப்கார்ட்டில் சிறந்த சலுகைகள் கிடைக்கிறது. இந்த ஐபோன் 14 ஸ்மார்ட்போன் வெளியான புதிதில் iPhone 13 உடன் ஒப்பிடப்பட்டு அதன் வசதிகள் மற்றும் விலை வேறுபாடு பெரிய அளவில் இல்லை என்ற காரணத்தால் பெரிதான சலசலப்பை உருவாக்கவில்லை. ஆனால் அதன் பின் விலை குறைப்பு அடைந்ததால் Apple iPhone 14 விற்பனை அதிகரிக்க ஆரம்பித்தது. ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட்டு சில மாதங்களே ஆன போதிலும், தற்போது நவராத்திரியை முன்னிட்டு பிளிப்கார்ட்டில் இது பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 தற்போது நவராத்திரியின் போது ரூ.34,000 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.37,999க்கு கிடைக்கிறது.
அம்சங்கள்
ஆப்பிள் ஐபோன் 14 மாடலானது, ஐபோன் 14 சீரிஸின் முதல்நிலை மாடலாகும். இது தவிர இந்த சீரிஸில் ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ், ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களும் உள்ளன. ஆப்பிள் ஐபோன் 14 ஆனது ஆப்பிள் ஐபோன் 13 போன்ற சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, ஆனால் அதிக கோர்களுடன். இது முன்பக்கத்தில் 6.1 அங்குல சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 13 போன்ற நாட்ச் உடன் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கான 12எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், 12MP சென்சார்கள் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
விலைக்குறைப்பை பெறுவது எப்படி?
ஆப்பிள் ஐபோன் 14 தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.8,901 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.71,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, வாங்குபவர்கள் HDFC வங்கியின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 4000 ரூபாய் உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர, Flipkart உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. ஆனால், உங்கள் பழைய போன் அதற்கு தகுதியானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதற்குத் தகுந்தபடி விலையில் மாற்றம் இருக்கும். இவ்வாறு அனைத்து தள்ளுபடிகள் மற்றும் வங்கிச் சலுகைகளளுக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் 14 ரூ.34,000 தள்ளுபடியைப் பெறும். இதன் மூலம் ரூ.71,999க்கு பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படும் ஐபோன் 14ஐ ரூ.37,999க்குப் பெற முடியும். விலை மற்றும் சலுகை அடிக்கடி மாற்றத்திற்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.