
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் போன்கள் மீது ரூ.7,000 உடனடி தள்ளுபடியை வழங்கி இருக்கிறது. இந்த தள்ளுபடி விலையில் புது ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நீங்கள் எப்படி, எங்கு வாங்கலாம் என்று இப்போது பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோ முழுவதும் உள்ள தயாரிப்புகளுக்கு உடனடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் இப்போது இந்த தள்ளுபடி லைவில் உள்ளது.
யாருக்கு கிடைக்கும் இந்த தள்ளுபடி?
HDFC வங்கி வழங்கிய கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும். iPhone 14 தொடரில் உள்ள போன்கள் மீது ரூ.7,000 உடனடி தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல், ஆப்பிள் M2 மேக்புக் ஏர் அல்லது 13 இன்ச் மேக்புக் ப்ரோ சாதனங்களின் லைன் அப்பில் ரூ.10,000 வரை தள்ளுபடியும் இப்போது கிடைக்கிறது.
நிபந்தனையோடு தள்ளுபடி
ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரின் சமீபத்திய சலுகை, அதன் அதிகாரப்பூர்வ வர்த்தகம் மற்றும் மேம்படுத்தல் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, புது ஆப்பிள் ஐபோன் 14 ஐ மாதத்திற்கு வெறும் ரூ. 8,000 என்ற விலைக்குக் குறைவான விலையில் நீங்கள் வாங்கலாம். இருப்பினும், இந்த சலுகை விலையானது, ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இரண்டு ஆண்டுகள் பழமையான ஐபோன் 12 ஐப் எக்ஸ்சேஞ் செய்யும் போது மட்டுமே கிடைக்கும்.
ரூ.25,000 வரை சலுகை
தற்போது, ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் பயனர்கள் இரண்டு வருட ஐபோன் 12 மீது ரூ. 25,000 டிரேட்-இன் கிரெடிட்டைப் பெறலாம். ஐபோன் 14 இன் அதிகாரப்பூர்வ விலையான ரூ.79,900 விலைக்கு இருக்கிறது. இதன் படி, ஐபோன் 14 இன் விலையை ரூ. 54,900 ஆகக் குறைக்கிறது. இதனுடன், HDFC வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ரூ. 7,000 உடனடி தள்ளுபடிக்குத் தகுதியுடையவர்கள், கூடுதலாக, மூன்று அல்லது ஆறு மாத காலத்திற்கான நோ-காஸ்ட் EMI விருப்பமும் கிடைக்கிறது.
ரூ.7,983க்கு ஐபோன்
ஒட்டுமொத்தமாக, இது ஐபோன் 12 உடன் ஏற்கனவே இருக்கும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு புதிய iPhone 14 ஐ மாதத்திற்கு ரூ.7,983 மட்டுமே EMI ஆக ஆறு மாத காலத்திற்கு வசூலிக்கப்படுகிறது. எக்ஸ்சேஞ் செய்வதற்கான போன் இல்லாமல், ஆப்பிள் வாடிக்கையாளர்கள் ஐபோன் 14 ஐ ஆறு மாத EMI இல் மாதம் ரூ.12,150 முதல் பெறலாம். இப்போது அனைத்து iPhone 14 மாடல்களுக்கும் ரூ.7,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கிறது.
இத்துடன், ஆப்பிள் நிறுவனத்தின் – மேக்புக் ப்ரோ 13 இன்ச் மற்றும் மேக்புக் ஏர் எம்2 மீது ரூ. 10,000 தள்ளுபடி கிடைக்கிறது. – ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் மீது ரூ. 5,000 தள்ளுபடி கிடைக்கிறது. – ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஐபேட் ஏர் மீது ரூ. 4,000 தள்ளுபடி கிடைக்கிறது. – ஐபேட் (10வது ஜென்) மீது ரூ. 3,000 தள்ளுபடி கிடைக்கிறது. – ஏர்பாட்ஸ் ப்ரோ (2வது ஜென்) மீது ரூ. 2,000 தள்ளுபடி கிடைக்கிறது. மொத்தத்தில் ஆப்பிள் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான காலம்.







