
ஆப்பிள் நிறுவனம் தீபாவளி விற்பனையை துவங்கி இருக்கிறது. பண்டிகை காலம் துவங்கி விட்டதாகவும், ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் ஏராளமான சலுகைகள் அனைவருக்கும் வழங்கப்படுவதாக ஆப்பிள் அறிவித்து இருக்கிறது. தீபாவளி விற்பனையை முன்னிட்டு பயனர்கள் அனைத்து சாதனங்களிலும் அதிகபட்சம் 7 சதவீதம் வரை உடனடி சேமிப்புகள், ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும்.
சலுகை விவரங்கள்
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோர் ரூ. 7 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த சலுகை ரூ. 41 ஆயிரத்து 900 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்டு அனைத்து சாதனங்களை வாங்கும் போதும் பொருந்தும். இது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை சேர்க்கும் போது ரூ. 41 ஆயிரத்து 900 வரையிலான பொருட்களை வாங்கும் போது பொருந்தும்.
முன்னணி வங்கிகள் சார்பில் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஐபோனை எக்சேன்ஜ் செய்து உடனே புதிய ஐபோனினை வாங்கிக் கொள்ள முடியும். ஆப்பிள் டிரேட்-இன் வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களின் பழைய ஸ்மார்போனை ஸ்டோர் கிரெட்-க்கு எக்சேன்ஜ் செய்து புதிய ஐபோன் வாங்கிக் கொள்ள முடியும்.
சிறப்பு சலுகை
வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபேட், ஏர்பாட்ஸ், ஏர்டேக் மற்றும் ஆப்பிள் பென்சில் (2nd Gen) உள்ளிட்ட சாதனங்களில் பிரத்யேக என்கிரேவிங் செய்து கொள்ள முடியும். அதுவும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி, மராத்தி, குஜராத்தி மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இலவசமாக என்கிரேவிங் செய்யலாம். மேலும் மேக் சாதனங்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கூடுதல் ரேம் மற்றும் கிராபிக்ஸ் கார்டு உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொள்ளலாம். இது தொடர்பான சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்ள ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைனில் ஆப்பிள் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். பயனர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தங்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
சீனாவுக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017 முதல் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. முதன் முதலில் ஐபோன் SE மாடல் தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த வரிசையில், ஐபோன் 12, ஐபோன் 13 மாடல்களுடன் ஐபோன் 14 தற்போது புதிதாக இணைந்துள்ளது.
இம்மாத துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் மேம்பட்ட கேமரா, சக்திவாய்ந்த சென்சார்கள், செயற்கைக்கோள் மெசேஜிங் என ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஐபோன் 14 சீரிசில்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மாடல்களில் ஐபோன் 14 உற்பத்தி இந்தியாவில் அடுத்த சில தினங்களில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் தமிழகத்தின் சென்னை அருகில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் புது ஐபோன் 14 மாடல்கள் உற்பத்தி நடைபெற உள்ளன. சர்வதேச சந்தையில் முன்னணி மின்சாதன உற்பத்தியாளர் மற்றும் மிக முக்கிய ஐபோன் உற்பத்தியாளர் என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.